U19 உலகக் கோப்பை தொடரில் ஜப்பான் அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
U19 உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் மற்றும் அதிக முறை(4) கோப்பையை வென்ற இந்திய அணி ஜப்பானை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜப்பான் அணி 22.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 41 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிலும் 19 ரன்கள் எக்ஸ்டாரஸ். ஜப்பான் அணியின் அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகினர். அந்த அணியில் 5 வீரர்கள் தொடர்ந்து டக் அவுட்டாகி வெளியேறினர்.
இந்திய அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் 5 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். கார்த்திக் தியாகி 3 விக்கெட்களையும், ஆகாஷ் சிங் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து 41 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எளிதாக இலக்கை எட்டியது. U19 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
U19 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் 2வது குறைந்தபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன் 2004 U19 உலகக் போப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணியை ஆஸ்திரேலியா 22 ரன்களில் சுருட்டியது. இதற்கு அடுத்து கனடா மற்றும் வங்கதேச அணிகள் முறையே 2002 மற்றும் 2008 உலகக் கோப்பை தொடர்களில் 41 ரன்கள் எடுத்திருந்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.