முகப்பு /செய்தி /விளையாட்டு / யு 19 உலகக்கோப்பை டி20 : இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

யு 19 உலகக்கோப்பை டி20 : இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

நியூசிலாந்து அணியை வென்ற உற்சாகத்தில் இந்திய அணி.

நியூசிலாந்து அணியை வென்ற உற்சாகத்தில் இந்திய அணி.

தொடக்க வீராங்கனை ஸ்வேதா செராவத் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார். சவுமியா திவாரி 22 ரன்கள் சேர்த்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

யு 19 உலகக்கோப்பை மகளிர் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் வலுவான இங்கிலாந்து அணியை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டி நாளை மாலை இந்திய  நேரப்படி 5.30 மணிக்கு தொடங்குகிறது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை டி20 போட்டித் தொடர் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. கடந்த 14 ஆம் தேதியில் இருந்து இந்த தொடர் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதன் இறுதிப் போட்டியில் விளையாட ஆஸ்திரேலிய அணியை வென்று இங்கிலாந்தும், நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியாவும் தகுதி பெற்றுள்ளன.

நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக பில்மர் 35 ரன்களும், விக்கெட் கீப்பர் இசபெல்லா கேஸ் 26 ரன்களும் எடுத்தனர். இந்திய பவுலர் பர்ஷவி சோப்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து பேட் செய்த இந்திய அணி 14.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனை ஸ்வேதா செராவத் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார். சவுமியா திவாரி 22 ரன்கள் சேர்த்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் எடுத்தது. 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

First published:

Tags: Cricket