ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

யு19 உலகக்கோப்பை டி20 : இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய மகளிர் அணி…

யு19 உலகக்கோப்பை டி20 : இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய மகளிர் அணி…

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணி.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணி.

நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இலங்கையை 7 விக்கெட் வித்திசாயசத்தில் வென்றுள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் போட்செஸ்ட்ரூம் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியாவும் இலங்கையும் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷபாலி வர்மா பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து இலங்கை அணியில் நெத்மி செனரத்னே, சுமுடு நிசான்சலா ஆகியோர் களத்தில் இறங்கினர். இதில் முதல் பந்திலேயே நெத்மி செனரத்னே டைட்டஸ் சாது பந்துவீச்சில் அர்ச்சனா தேவியிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

கேப்டன் விஷ்மி குணரத்னே 28 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்தார். உமயா ரத்னநாயகே 13 ரன்களில் வெளியேற மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 59 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் பர்ஷவி சோப்ரா 4 விக்கெட்டுகளையும், மன்னத் கஷ்யப் 2 விக்கெட்டுகளையும், டைட்டஸ் சாது, அர்ச்சனா தேவி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

60 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 7.2 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. கேப்டன் ஷபாலி வர்மா ஒரு சிக்சர், பவுண்டரியுடன் 15 ரன்களும், ஷ்வேதா செராவத் 13 ரன்களும், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 4 ரன்களும் எடுத்தனர். 15 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 28 ரன்கள் சேர்த்த சவுமியா திவாரி கவனம் ஈர்த்தார். நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.

First published:

Tags: Cricket