#INDvBAN | மகுடம் சூடுமா இந்தியா...? வரலாறு படைக்குமா வங்கதேசம்...?

U19 WorldCup | INDvBAN

#INDvBAN | மகுடம் சூடுமா இந்தியா...? வரலாறு படைக்குமா வங்கதேசம்...?
கோப்பையுடன் இரு அணிகளின் கேப்டன்கள்
  • News18
  • Last Updated: February 9, 2020, 10:53 AM IST
  • Share this:
ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் தென்ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி, அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி 7-வது முறையாக இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

அதேவேளையில், வங்கதேச அணியானது நியூசிலாந்தை வெளியேற்றி, முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.


இந்நிலையில், போட்செஃப்ஸ்ட்ரூம் மைதானத்தில் நடைபெறும் இறுதியாட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, வங்கதேச அணியுடன் மோதவுள்ளது. இப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கும் தொடங்குகிறது.

இத்தொடரில் இதுவரை ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்று, வலுவான அணியாக உலா வருகிறது. எனவே, 5-வது முறை மகுடம் சூடி சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேவேளையில், வங்கதேச அணியும் முன்னணி அணிகளை வீழ்த்தி அதிர்ச்சியளித்துள்ளது. இதனால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
First published: February 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading