ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

யு-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியில் 18 வயது தமிழக வீரர் தேர்வு

யு-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியில் 18 வயது தமிழக வீரர் தேர்வு

யு-19 உலகக்கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர் மானவ் பராக்.

யு-19 உலகக்கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர் மானவ் பராக்.

யு-19 உலகக்கோப்பையை 4 முறை வென்ற இந்திய அணியில் இந்த முறை தமிழ்நாடைச் சேர்ந்த 18 வயதான இளம் சுழற்பந்து ஆல்ரவுண்டர் மானவ் பராக் சேர்கப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

யு-19 உலகக்கோப்பையை 4 முறை வென்ற இந்திய அணியில் இந்த முறை தமிழ்நாடைச் சேர்ந்த 18 வயதான இளம் சுழற்பந்து ஆல்ரவுண்டர் மானவ் பராக் சேர்கப்பட்டுள்ளார். இவர் சென்னையில் பிறந்தவர்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இதில் 4 முறை சாம்பியனான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக டெல்லியைச் சேர்ந்த பேட்ஸ்மேன் யாஷ் துல்லும், துணை கேப்டனாக ஆந்திராவின் எஸ்.கே.ரஷீத்தும் நியமிக்கப்பட்டு உள்ளனர். 17 பேர் கொண்ட இந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த மனவ் பராக்கும் அங்கம் வகிக்கிறார்.

சென்னையில் பிறந்தவரான 18 வயதான மனவ் பராக் சுழற்பந்து வீசக்கூடிய ஆல்-ரவுண்டர் ஆவார். மொத்தம் 48 போட்டிகள் நடைபெறும். இந்திய ஜூனியர் அணி இதுவரை 2000, 2008, 2012, 2018ம் ஆண்டு ஜூனியர் உலகக்கோப்பையை வென்றுள்ளது. 2016-ல் ரன்னர்களாக வந்ததோடு பல இளம் வீரர்களை உற்பத்தி செய்து அவர்கள் இந்திய அணி வரை ஆடி வருகின்றனர்.

இந்நிலையில் ஜூனியர் உலகக்கோப்பை அணிக்கான கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்ட டெல்லியைச் சேர்ந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யாஷ் துல் என்பவர் வினூ மன்காட் டிராபியில் அதிக ரன்களைக் குவித்தவர்.

Also Read: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: ‘அட்டாக்கிங்’ இந்தியாவுக்கு ஹாட்ரிக் வெற்றி

ஜூனியர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி வருமாறு:

யாஷ் துல் (கேப்டன்), ஹர்நூர் சிங், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, எஸ்.கே.ரஷீத் (து.கேப்டன்), நிஷாந்த் சித்து, சித்தார்த் யாதவ், அனீஷ்வர் கவுதம், தினேஷ் பானா (வி.கீ), ஆராத்ய யாதவ் (வி.கீ), ராஜ் அங்கத் பவா, மானவ் பராக், கவுஷல் தாம்பே, ஹங்கர்கேக்கர், வாசு வாட்ஸ், விக்கி ஆஸ்ட்வால், ரவிக்குமார், கேரி சங்வான்.

First published:

Tags: Cricket