முகப்பு /செய்தி /விளையாட்டு / U 19 T20 : உலகக் கோப்பையை வென்று இந்திய ஜூனியர் மகளிர் அணி சாதனை…

U 19 T20 : உலகக் கோப்பையை வென்று இந்திய ஜூனியர் மகளிர் அணி சாதனை…

இந்திய ஜூனியர் மகளிர் அணி

இந்திய ஜூனியர் மகளிர் அணி

சவுமியா திவாரி – கோங்கடி திரிஷா இணை அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ரன்னுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் இந்த இருவரும் பார்ட்னர் ஷிப் அமைக்கத் தொடங்கினர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கு முதன் முறையாக இந்த போட்டி நடத்தப்பட்ட நிலையில், இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இன்று நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய ஜூனியர் மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை டி20 போட்டித் தொடர் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. கடந்த 14 ஆம் தேதியில் இருந்து இந்த தொடர் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டு வந்தது.

இதன் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 3 ரன் வித்தியாசத்தில் வென்று, இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில் இன்று இறுதிப் போட்டி நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்து.

இதையடுத்து 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களத்தில் இறங்கியது. தொடக்க வீராங்கனையாக விளையாடிய கேப்டன் ஷபாலி வர்மா 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு வீராங்கனை ஸ்வேதா ஷெராவத் 5 ரன்னில் வெளியேற, அடுத்து இணைந்த சவுமியா திவாரி – கோங்கடி திரிஷா இணை அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ரன்னுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் இந்த இருவரும் பார்ட்னர் ஷிப் அமைக்கத் தொடங்கினர். சவுமியா 37 பந்துகளில் 24 ரன்னும், கோங்கடி திரிஷா 29 பந்தில் 24 ரன்னும் சேர்த்து அணியை வெற்றி பெற வைத்தனர். 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டி, உலகக்கோப்பையை வென்றது.

First published:

Tags: Cricket