Home /News /sports /

விளையாட்டு உலகில் பரபரப்பு... இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..!

விளையாட்டு உலகில் பரபரப்பு... இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..!

திருமணம் செய்துகொண்ட கிரிக்கெட் வீராங்கனைகள்.

திருமணம் செய்துகொண்ட கிரிக்கெட் வீராங்கனைகள்.

#Australia’s #NicolaHancock and #NewZealand’s #HayleyJensen enter the wedlock | ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை நிக்கோலா ஹான்காக் மற்றும் நியூசிலாந்தின் ஹேலி ஜேன்சென் ஆகியோர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

  • News18
  • Last Updated :
    நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

    நியூசிலாந்து நாட்டில் ஒரே பாலினத்தோர் திருமணம் செய்துகொள்ள சட்டத்தில் அனுமதி உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பாலின திருமண மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மசோதாவுக்கு ஆதரவாக பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்ததால் சட்டமாக்கப்பட்டு, அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் முதல் சட்டமாக அமலுக்கு வந்தது. நியூசிலாந்தில் அன்று முதல் பல ஒரு பாலின திருமணங்கள் நடந்துள்ளன.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை நிக்கோலா ஹான்காக் மற்றும் நியூசிலாந்தின் ஹேலி ஜேன்சென் ஆகியோர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

    அவர்கள் இருவரும் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பிக் பேஷ் லீக் தொடரில் விளையாடும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.



    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் லீக் தொடரின் முதலிரண்டு சீசன்களில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக நிக்கோலா ஹான்காக் விளையாடினார். தற்போது, அவர் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

    உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு... இந்தியாவை சமாளிக்க புதிய திட்டம்!

    தல தோனி எப்போது அணிக்கு திரும்புவார்? ரெய்னாவின் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!

    தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு... தோல்விக்குப் பிறகு மைதானத்துக்கு வந்த தோனி!

    ஐபிஎல் போட்டியிலிருந்து தோனி விலகியதற்கு இதுதான் காரணமா?

    ஹைதராபாத் மைதானத்தில் சி.எஸ்.கே கொடி, தோனி படத்துக்கு அனுமதி மறுப்பு: ரசிகர்கள் குமுறல்!

    தோனி இருக்கும்போது எனக்கு என்ன வேலை? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்!








    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Murugesan L
    First published:

    Tags: Cricket, Same-sex Marriage

    அடுத்த செய்தி