முகப்பு /செய்தி /விளையாட்டு / இந்திய அணி வாட்ஸ் அப் குழுவுக்கு வந்த குழப்பமான மெசேஜ்கள்

இந்திய அணி வாட்ஸ் அப் குழுவுக்கு வந்த குழப்பமான மெசேஜ்கள்

டீம் இந்தியா

டீம் இந்தியா

5வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடக்க வேண்டியது நேற்று ரத்து செய்யப்பட்டது, கோவிட் காரணமாக ரத்து செய்யப்படுவதற்கு முன்பாக இந்திய வீரர்களின் வாட்ஸ் அப் குழுவில் குழப்பமான சில மேசேஜ்கள் வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது, இது ஒத்திவைக்கப்பட்டதா, அல்லது இந்தியா விட்டுக் கொடுத்ததால் தோல்வியா அல்லது இந்தியா 2-1 என்று தொடரை வென்றதா, 2022-ல் இந்த டெஸ்ட் தொடரின் தொடர்ச்சியாக 5வது டெஸ்ட் நடைபெறுமா, அல்லது ஒரு ஒன் ஆஃப் டெஸ்ட் வைத்து தீர்மானிக்கப்படுமா என்பதெல்லாம் இன்னும் முடிவு செய்யப்படாமல் தொங்கலில் தான் உள்ளது.

முதலில் ரவிசாஸ்திரி, கோலி அண்ட் கோ புத்தக வெளியீட்டு விழாவுக்கு பொறுப்பற்ற முறையில் சென்று ரவிசாஸ்திரி கோவிட்டை வாங்கி வர, பாரத் அருண், ஆர்.ஸ்ரீதர் , நிதின் படேல் தனிமைப்படுத்தப்பட்டனர். கடைசியாக டீம் பிசியோ யோகேஷ் பார்மர் கடைசியாக கொரோனா பாசிட்டிவில் சிக்க, அவர் அணியில் ரோகித் சர்மா, புஜாரா, பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி என்று அனைவருக்கும் உடற்பயிற்சி அளித்த வகையில் இந்திய அணி முழுதும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

ஆனால் இதன் ரிசல்ட் நெகெட்டிவ் என்று வந்த பிறகும் களமிறங்க விருப்பமில்லை என்று இந்திய அணி தெரிவிக்க மான்செஸ்டர் டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது, அல்லது ஒத்திவைக்கப்பட்டது, அல்லது வேறு ஏதோ ஒன்று, என்று ஒன்றும் புரியாத நிலையில் தொங்கலில் உள்ளது. இதனால் ஈசிபிக்கு பெரு நஷ்டம். அந்த நஷ்டத்தை பிசிசிஐ-உடன் பேசித்தான் தீர்க்க முடியும்.

ஆனால் டெஸ்ட் ரத்து ஆவதற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணியின் வாட்ஸ் அப் குழுவுக்கு குழப்பமான செய்திகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அதாவது, “மேட்ச் ரத்து செய்யப்பட்டு விட்டது. நீங்கள் ஒவ்வொருவரும் அறையிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

இந்த செய்தி வந்து 10 நிமிடங்களுக்கெல்லாம், “உங்கள் அறைக்கு காலை உணவை ஏற்பாடு செய்ய முடியவில்லை, உணவு விடுதிக்குச் சென்று உணவு அருந்துங்கள்” என்று இன்னொரு செய்தி வந்தது.

வீரர்கள் குழம்பி விட்டனர், முதலில் அறையிலேயே இருங்கள், பிறகு ரெஸ்டாரண்ட் சென்று சாப்பிடுங்கள் என்று இரண்டு முரண்பட்ட மெசேஜ். இந்திய அணி டெஸ்ட்டை ரத்து செய்ததால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.200 கோடி நஷ்டம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: India Vs England, Test series