மும்மூர்த்திகளாக உருமாறிய ‘பாகுபலி’ புஜாரா.. ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்!

Twitterati cheer for #CheteshwarPujara | ஆஸ்திரேலிய மண்ணில் 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகி இந்திய அணி அவமானப்படப் போகிறது என்ற பலரது கணிப்பை புஜாரா பொய்யாக்கினார். #AUSvIND #Pujara

Web Desk | news18
Updated: December 6, 2018, 11:09 PM IST
மும்மூர்த்திகளாக உருமாறிய ‘பாகுபலி’ புஜாரா.. ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்!
சதமடித்த மகிழ்ச்சியில் புஜாரா (BCCI)
Web Desk | news18
Updated: December 6, 2018, 11:09 PM IST
‘பாகுபலி’ லிங்கத்தை தூக்கியதுபோல், இந்திய டெஸ்ட் அணியை தூக்கிச் சுமந்த புஜாராவை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக இருந்தது. முதல் வரிசை வீரர்கள், முன்னணி வீரர்கள் என அனைவரும் வந்த வேகத்தில் வெளியேறிக் கொண்டிருந்தனர்.

இந்திய அணியின் சோதனைக் காலத்தில், ‘பாகுபலி’ லிங்கத்தை தூக்கியதுபோல், இந்திய டெஸ்ட் அணியை புஜாரா தூக்கிச் சுமந்தார். ஆஸ்திரேலிய மண்ணில் 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகி இந்திய அணி அவமானப்படப் போகிறது என்ற பலரது கணிப்பை அவர் பொய்யாக்கினார். சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி 250 ரன்கள் எடுத்தபோது ‘கட்டப்பா’ கம்மின்ஸ் உருவத்தில் வந்ததால் ‘பாகுபலி’ புஜாரா 123 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
Loading...


மும்மூர்த்திகளாக உருமாறிய புஜாரா, 40 ரன்கள் வரை ராகுல் டிராவிட்டைப் போல் சிறுகச்சிறுக ரன்களைச் சேர்த்தார். 40 - 80 ரன்கள் வரை சச்சின் டெண்டுல்கரைப் போல் வாய்ப்புக் கிடக்கும்போது பவுண்டரிகள் அடித்தார். 80-120 ரன்கள் வரை அதிரடி பேட்ஸ்மேன் விரேந்திர சேவாக் போல் கிடைத்த பந்துகளை எல்லாம் எல்லைக் கோட்டிற்கு அனுப்பினார். ஆபத்பாண்டவன் புஜாராவை, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

Also Watch...

First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்