• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • முட்டையால் ஏற்பட்ட பஞ்சாயத்து - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

முட்டையால் ஏற்பட்ட பஞ்சாயத்து - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

கோலி

கோலி

வீகன் (Vegan) உணவு முறையை விராட் கோலி பின்பற்றி வருவதாக எண்ணிய ரசிகர்கள் கோலியின் பதிலைக் கண்டு அவர் வெஜிடேரியனா அல்லது நான்-வெஜிடேரியனா என்று கடும் குழப்பமடைந்தனர்.

 • Share this:
  இந்திய கேப்டன் விராட் கோலி எவ்வளவு பிசியாக இருந்தாலும் சமூகவலைதளங்களில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்க கூடியவர். வரும் 18 முதல் 22 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியா - நியுசிலாந்து அணிகள் மோத உள்ளன. இதற்காக  இந்திய அணி இங்கிலாந்து புறப்பட உள்ளது.

  நாட்டில் தொற்று நீடித்து வரும் நேரத்தில் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு கடந்த 2 வாரங்களாக இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். குவாரன்டைன் நேரத்தில் இன்ஸ்டா பக்கம் வந்த விராட் கோலி, தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸுடன் "in quarantine... ask me your questions" என்ற ஒரு கேள்வி பதில் செஷனை நடத்தினார்.

  ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது சில ரசிகர்கள் கோலியின் உணவுமுறை பற்றி தெரிவிக்குமாறு கேட்டனர். இதற்கு பதிலளித்த விராட் கோலி நிறைய காய்கறிகள், சில முட்டைகள், 2 கப் காஃபி, குயினோவா, நிறைய கீரை, தோசைகள் கூட. ஆனால் இவை அனைத்தும் எனக்கேற்ப கட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில்' சாப்பிடுவேன் என்று பதில் அளித்தார். இந்த பதிலை கோலி சொன்ன உடனேயே நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கேள்வியுடன் கூடிய காரசார விவாதங்கள் நடக்க துவங்கி விட்டது.

  இதற்கு முக்கிய காரணம் தனது டயட் லிஸ்டில் கோலி முட்டைகளை சேர்த்து இருந்தது தான். ஏனென்றால் இதற்கு முன் ஊடகங்களில் பேசிய போது தான் ஒரு "வெஜிடேரியன்" என்று கோலி தன்னை அடையாளப்படுத்தி கொண்டது தான். சைவ உணவை பின்பற்றுவதாக இதற்கு முன் கூறிய கோலி, தற்போது தனது உணவில் முட்டைகளை எப்படி சேர்க்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதங்கள் நடைபெற்றன. அதில் ஒரு சிலர் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனுடனான ஒரு உரையாடலின் போது, சைவ உணவை பின்பற்றுவது என்பது எனது வாழ்க்கையில் எடுத்த சிறந்த முடிவுகளில் ஒன்று என கோலி தெரிவித்திருந்ததாக நினைவு கூர்ந்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  விவாதத்தில் ஈடுபட்ட பல நெட்டிசன்கள் அவரது முந்தைய பேச்சுக்களை குறிப்பிட்டு கோலியை நோக்கி விமர்சனங்களை வீச துவங்கினர் .மேலும் வீகன் (Vegan) உணவு முறையை விராட் கோலி பின்பற்றி வருவதாக எண்ணிய ரசிகர்கள் கோலியின் பதிலைக் கண்டு அவர் வெஜிடேரியனா அல்லது நான்-வெஜிடேரியனா என்று கடும் குழப்பமடைந்தனர்.

  இந்நிலையில் தனது ஒரு பதில் இவ்வளவு பெரிய விவாதம் மற்றும் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்று எதிரார்க்காத கோலி, தற்போது மீண்டும் தனது உணவுமுறை பற்றி தெளிவுபடுத்தி உள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "நான் ஒருபோதும் என்னை வீகன்(Vegan) உணவு உண்பவன் என்று சொல்லி கொண்டது கிடையாது. உண்மையில் நான் சைவ உணவு உண்பவன் (vegetarian). உங்களுக்கு வேண்டுமென்றால் உங்கள் காய்கறிகளை சாப்பிடுங்கள்" என்று வேடிக்கையாக பதில் அளித்துள்ளார்.

  https://twitter.com/imVkohli/status/1399648496769134593

  https://twitter.com/i/status/1399651244805824519

  பொதுவாக Vegan உணவுப்பழக்கம் என்பது சைவ உணவுப் பழக்கத்துடன் சேர்த்து பனீர், தயிர், சீஸ், நெய் மற்றும் விலங்குகளிடமிருந்து பெறப்படும் முட்டை, எண்ணெய் போன்ற உணவுகளை தவிர்ப்பது. இந்த உணவு முறையை தமிழில் சுத்த சைவம் என்பார்கள். இதனிடையே கோலி தான் வீகன் இல்லை, வெஜிடேரியன் என்று தெளிவுபடுத்தி தனது டயட் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Arun
  First published: