#NZvIND: ட்விட்டரில் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடும் ரசிகர்கள்!

Twitter Rejoices After India's Series Triumph | 4-வது போட்டியில் அடைந்த படுதோல்விக்கு, இந்த வெற்றியின்மூலம் இந்திய அணி பதிலடி கொடுத்தது. #TeamIndia #NZvIND

#NZvIND: ட்விட்டரில் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடும் ரசிகர்கள்!
ஒரு நாள் தொடருக்கான கோப்பை உடன் இந்திய அணி. (BCCI)
  • News18
  • Last Updated: February 3, 2019, 5:44 PM IST
  • Share this:
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் மீண்டு வந்த இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என கைப்பற்றியது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி இந்திய அணி, 4-வது போட்டியில் படுதோல்வி அடைந்ததால் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

Ambati Rayudu, Vijay Shankar, அம்பதி ராயுடு, விஜய் சங்கர்
அம்பதி ராயுடு மற்றும் கேதர் ஜாதவ். (BCCI)



இரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் அம்பதி ராயுடு (90), விஜங் சங்கர் (45), ஹர்திக் பாண்டியா (45) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 252 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.

அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4-வது போட்டியில் அடைந்த படுதோல்விக்கு, இந்த வெற்றியின்மூலம் இந்திய அணி பதிலடி கொடுத்தது.

Indian Team, இந்திய கிரிக்கெட் அணி
ஒரு நாள் தொடருக்கான கோப்பை உடன் இந்திய அணி. (BCCI)
இந்திய அணி மீண்டு வந்து வெற்றி பெற்றதை கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.





















#NZvIND: வைரலாகும் தோனியின் அசத்தல் ரன் அவுட் வீடியோ!

Also Watch...

First published: February 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்