இது அவுட்டா? இல்லையா? குழப்பத்தில் சச்சின் வெளியிட்ட விநோதமான வீடியோ!

Vijay R | news18
Updated: July 25, 2019, 6:43 PM IST
இது அவுட்டா? இல்லையா? குழப்பத்தில் சச்சின் வெளியிட்ட விநோதமான வீடியோ!
Vijay R | news18
Updated: July 25, 2019, 6:43 PM IST
சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள வீடியோவை பாரத்து பலர் குழப்பத்தில் உள்ளனர்.

சச்சின் பதிவு செய்துள்ள அந்த வீடியோ இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி தான். போட்டியின் போது பேட்ஸ் மேன் பந்தை தடுத்து விளையாட முயற்சி செய்கிறார். ஆனால் பந்தை அவரால் தடுக்க முடியமால் பின்புறம் உள்ள ஸ்டெம்ப் மீது பட்டு செல்கிறது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பந்து பட்ட உடன் பெய்ல் ஸ்டெம்பிலிருந்து பாதி நகர்ந்து விடுகிறது. ஆனால் ஸ்டெம்பில் இருந்து கீழே விழவில்லை. பந்துவீச்சாளர் உட்பட அனைவரும் நடுவரிடம் அவுட் கேட்கின்றனர்.


இதற்கு என்ன முடிவு கொடுப்பது என்று நடுவர்களுக்குள் சந்தேகம் வர இறுதியில் அவுட் இல்லை என்று அறிவித்துள்ளனர். இந்த வீடியோவை சச்சினின் நண்பர் அவருக்கு பகிர்ந்து இது அவுட்டா என்று கேள்வி எழுப்பி உள்ளார். வீடியோவை பார்த்து சச்சினும் குழப்பம் அடைந்துள்ளார்.விநோதமான இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், “என்னுடைய நண்பர் இந்த வீடியோவை எனக்கு அனுப்பி உள்ளார். இதுப் போன்று நடப்பது வழக்கத்திற்கு மாறானது. ஒரு வேளை நீங்கள் நடுவர்களாக இருந்தால் என்ன முடிவு கொடுப்பீர்கள்“ என்று கேள்வி உள்ளார்.

Also Watch
First published: July 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...