விக்கெட் எடுத்த அஸ்வின்... கடுப்பான பட்லர்!

இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேற பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

news18
Updated: March 26, 2019, 7:51 AM IST
விக்கெட் எடுத்த அஸ்வின்... கடுப்பான பட்லர்!
ஐபிஎல்
news18
Updated: March 26, 2019, 7:51 AM IST
ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லர், ரன் அவுட் செய்யப்பட்ட விதம் ரசிகர்களிடையே விமர்சனப் பொருளாக உருவெடுத்துள்ளது.

12-வது ஐபிஎல் சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பஞ்சாப்-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி. முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி,  20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிறிஸ் கெயில் அதிகபட்சமாக 79 ரன்களை எடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். அந்த அணியின் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். பஞ்சாப் அணியின் பந்துவீச்சை பவுன்டரிக்கு பறக்கவிட்டார் ஜோஸ் பட்லர். ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜோஸ் பட்லர், அஸ்வினால் ரன் அவுட் செய்யப்பட்டார். ஆனால் அவர் ரன் அவுட் செய்யப்பட்ட விதம் ரசிகர்களிடையே விமர்சனப் பொருளாக உருவெடுத்துள்ளது.13-வது ஓவரை அஸ்வின் வீசியபோது நான்-ஸ்ட்ரைக்கில் நின்றிருந்த ஜோஸ் பட்லர், பந்துவீசுவதற்கு முன்பே கிரீசை விட்டு வெளியேறியதால் சாமர்த்திமாக செயல்பட்ட அஸ்வின், அவரை ரன்-அவுட் செய்தார். முதல் திருப்புமுனையாக இது அமைந்தது. கிரிக்கெட் விதிமுறைப்படி பந்துவீச, செய்கை காட்டுவதற்கு முன், நான்-ஸ்டிரைக்கர் வெளியே சென்றால் ரன் அவுட் செய்யலாம். ஆனால் அஸ்வின் செயல் குறித்து சமூக வலைதளத்தில் இருவேறு கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. சிலர் அஸ்வின் செய்தது தவறு இல்லை என்றும், சிலர் குழந்தைகள் விளையாடுவதுபோல் அஸ்வின் விளையாடியுள்ளார் என்றும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.சிறப்பாக விளையாடி வந்த ஜோஸ் பட்லரை, அஸ்வின் ரன் அவுட் செய்ததால் கடுப்பான ஜோஸ் பட்லர், மைதானத்தை விட்டு கோபமாக வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து வெளியேற பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லரை அஸ்வின் ரன் அவுட் செய்யாமல் இருந்தால் நிச்சயம் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றிருக்கும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also watch

First published: March 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...