‘தல’ தோனி - பாண்டியா இணைந்து வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள விளம்பரம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இருவரும் நெருங்கிய நண்பர்களாவர். கிரிக்கெட் மைதானத்தை தவிர, மற்ற இடங்களிலும் இருவரும் சேர்ந்து இருக்கும் நிகழ்வுகள் பல நடந்துள்ளன.
தோனி - ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள விளம்பரம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த விளம்பரத்தில், இருவரும் பீகாரில் பேசப்படும் போஜ்புரி மொழியில் காமெடியாகப் பேசுவதுபோல் எடுக்கப்பட்டுள்ளது.
மைதானத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் தோனி விளையாடுவதாகவும், அதனை மரத்தின் மேலே இருந்து அவர்களே பார்ப்பது போலவும் விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. இருவரின் கதாபாத்திரம் மற்றும் பேச்சுவழக்கு ஆகியன கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Gajab… @msdhoni #SachMein! @starindia #StarValuePack pic.twitter.com/poqMUJ5qi2
— hardik pandya (@hardikpandya7) December 30, 2018
Gajab… @msdhoni #SachMein! @starindia #StarValuePack pic.twitter.com/poqMUJ5qi2
— hardik pandya (@hardikpandya7) December 30, 2018
Gajab… @msdhoni #SachMein! @starindia #StarValuePack pic.twitter.com/poqMUJ5qi2
— hardik pandya (@hardikpandya7) December 30, 2018
Being a bihari I must tell u that even great actors would not catch the accent so amazingly. 10/10 Brilliant 💗
— Aman Agrawal (@IamAgrawalAman) December 30, 2018
நீண்ட ஓய்வில் இருந்த தோனி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளார். அதேபோல், காயத்தில் இருந்து மீண்டு வந்த ஹர்திக் பாண்டியா, டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Watch...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hardik Pandya, MS Dhoni