Home /News /sports /

IND vs ENG-வர்ணனையில் இருந்து சேவாகை நீக்குக - கோலி ரசிகர்கள் கொந்தளிப்பு

IND vs ENG-வர்ணனையில் இருந்து சேவாகை நீக்குக - கோலி ரசிகர்கள் கொந்தளிப்பு

கோலி-சேவாக்

கோலி-சேவாக்

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் நேற்று இங்கிலாந்து விக்கெட்டுகள் விழுந்த போது விராட் கோலி டான்ஸ் ஆடி கொண்டாடினார். அதை சேவாக் வர்ணனையில் ’சமியா’ என்றா வார்த்தையை பயன்படுத்தி கோலியை கேலி செய்தார், இந்த வார்த்தை அவதூறானது என்று விராட் கோலி ரசிகர்கள் சேவாகை இந்தி வர்ணனையிலிருந்து நீக்கு என்று கொந்தளித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...

    284 ரன்களுக்கு இங்கிலாந்து சுருண்டது, இந்தியா 132 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் 125 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்று 3ம் நாளை முடித்துள்ளது. நேற்றைய தினம் சிலபல சம்பவங்களும் மைதானத்தில் நடந்தன.

    விராட் கோலி இங்கிலாந்து விக்கெட்டுகளை டான்ஸ் ஆடிக் கொண்டாடினார் அப்படிப்பட்ட ஒரு தருணத்தில்தான் வர்ணனையில் கயீஃபுடன் இருந்த சேவாக், டான்ஸைப் பார்த்து சமியா என்ற வார்த்தையுடன் சிலவற்றையும் சேர்த்துக் கூறினார்.

    அந்த வார்த்தை விராட் கோலியை அவதூறு செய்வது என்று கோலி ரசிகர்கள் சேவாகை வர்ணனைக்குழுவிலிருந்து நீக்குக என்று கொடிப்பிடித்துள்ளனர்.

    இந்த வீடியோ வைரலாகி கோலி ரசிகர்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு, சேவாக்கை நோக்கிய வசைமழையாக மாறியுள்ளது. கோலி பெண் போல் ஆடுகிறார் என்ற அர்த்தம் உட்பட அவதூறான அர்த்தம் ஒன்றும் சமியா என்ற வார்த்தைக்கு இருப்பதாகத் தெரிகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India Vs England, Virat, Virat Kohli, Virender sehwag

    அடுத்த செய்தி