முகப்பு /செய்தி /விளையாட்டு / கிறிஸ் கெய்ல் ட்வீட்டை கலாய்த்த நெட்டிசன்கள்! விஜய் மல்லையா ஆவேச ட்விட்

கிறிஸ் கெய்ல் ட்வீட்டை கலாய்த்த நெட்டிசன்கள்! விஜய் மல்லையா ஆவேச ட்விட்

விஜய் மல்லையா உடன் கிறிஸ் கெய்ல்

விஜய் மல்லையா உடன் கிறிஸ் கெய்ல்

ஐ.பி.எல் போட்டிகளில் கிறிஸ் கெய்ல் ஆரம்பத்தில்  பெங்களூரு அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணியின் முன்னாள் உரிமையாளராக இருந்தவர் விஜய்மல்லையா என்பது குறிப்பிடதக்கது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல், விஜய் மல்லையாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றுகளோடு மேற்கிந்திய தீவுகள் வெளியேறியது. 'யுனிவர்ஷல் பாஸ்' என அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் தொழிதிபர் விஜய் மல்லையாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கெயிலின் அந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பலர் விஜய் மல்லையா ஒரு திருடன், வங்கி மோசடியில் ஈடுப்பட்டு லண்டனில் தஞ்சமடைந்த ஏமாற்றுக்காரர் என கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த விஜய் மல்லையா, “என்னை திருடன் என்று சொல்வதற்கு முன் உங்களது வங்கிக்கு சென்று உண்மை நிலை என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். கடன் வாங்கிய பணத்தை 100 சதவீதம் திருப்பி தருகிறேன் என்ற போது அதனை வங்கிகள் ஏற்றுக்கொள்ளாதது ஏன்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகளில் கிறிஸ் கெய்ல் ஆரம்பத்தில்  பெங்களூரு அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணியின் முன்னாள் உரிமையாளராக இருந்தவர் விஜய்மல்லையா என்பது குறிப்பிடதக்கது.

இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் மோசடி  செய்த புகாரில் சிக்கிய விஜய் மல்லையா தற்பேர்து  இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளார். அவரை மீண்டும் இந்தியா கொண்டுவருவதற்கு மத்திய அரசு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. விஜய் மல்லையாவை பொதுவெளியில் பார்க்கும் இந்தியர்கள், அவரை திருடன் என்று வசைபாடி வருகின்றனர்.

Also Watch

First published:

Tags: Chris gayle, Vijay Mallya