முத்தரப்பு மகளிர் டி20 : இந்திய அணியை வீழ்த்தி பழிதீர்த்தது இங்கிலாந்து

முத்தரப்பு மகளிர் டி20 : இந்திய அணியை வீழ்த்தி பழிதீர்த்தது இங்கிலாந்து
  • Share this:
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மகளிர் முத்தரப்பு டி20 தொடரில் இந்திய அணியை 4 விக்கெட்கள் வித்தியாச்த்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா - இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மகளிர் முத்தரப்பு 20 கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டியின் சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 3வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதியன. இந்திய அணியின் மோசமான பேட்டிங் காரணமாக ஆஸ்திரேலியாவிடம் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


இதையடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டி20 மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிரிதி மந்தனாவை தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது.

எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தாலும் குறைவான இலக்கு என்பதால் 18.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து இங்கிலாந்து அணி இலக்கை எட்டியது. முதல் போட்டியில் அடைந்த தோல்வியை 2வது போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து பழிதீர்த்து கொண்டது.

இந்திய அணி நாளை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. முத்தரப்பு இறுதி போட்டியின் இறுதிப் போட்டிக்குள் நுழைய ஆஸ்திரேலியாவை பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றியடைய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
First published: February 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading