Home /News /sports /

இருவார இடைவெளியில், பெண் குழந்தை, தந்தையை இழந்து வாடும் ரஞ்சி வீரர்

இருவார இடைவெளியில், பெண் குழந்தை, தந்தையை இழந்து வாடும் ரஞ்சி வீரர்

தந்தை, பெண் குழந்தையை இழந்த பரோடா வீரர் விஷ்ணு சோலங்கி

தந்தை, பெண் குழந்தையை இழந்த பரோடா வீரர் விஷ்ணு சோலங்கி

தனது பெண் குழந்தை, தந்தை ஆகியோரை 2 வார இடைவெளியில் இழந்த பரோடா அணியின் ரஞ்சி வீரர் விஷ்ணு சோலங்கி இந்த சோகத்திலும் தொடர்ந்து ரஞ்சி கோப்பைப் போட்டியில் ஆடியுள்ளார்.

    தனது பெண் குழந்தை, தந்தை ஆகியோரை 2 வார இடைவெளியில் இழந்த பரோடா அணியின் ரஞ்சி வீரர் விஷ்ணு சோலங்கி இந்த சோகத்திலும் தொடர்ந்து ரஞ்சி கோப்பைப் போட்டியில் ஆடிவருகிறார்.

    கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி கொரோனா தடுப்பு வளையத்தில் இருந்த விஷ்ணு சோலங்கி பரோடா அணியினருடன் இருந்தார், அப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்த தகவல் கிடைத்தது. ஆனால் அதிர்ச்சிகரமாக ஒருநாளே உயிரோடு இருந்தது அந்தப் பெண் குழந்தை. அது இறந்து போனதாக விஷ்ணு சோலங்கிக்கு அதிர்ச்சி தகவல் வந்து சேர்ந்தது.

    இதனையடுத்து ஊருக்கு விரைந்த விஷ்ணு சோலங்கி பெங்காலுடனான ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. ஊரிலிருந்து திரும்பிய சோலங்கி மீண்டும் அணியுடன் இணைந்தார். சண்டிகர் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் ஆடத் தயாரானார். சண்டிகருக்கு எதிராக சதமெடுத்தார் சோலங்கி, பெண் குழந்தையை தொட்டுத் தூக்கக் கூட பாக்கியம் கிடைக்காத சோலங்கி இந்த சோகத்திலும் சதமெடுத்தது பலரையும் நெகிழச் செய்தது.

    இப்படியிருக்கையில் நேற்று காலை தந்தை இறந்து விட்டதாக இடிபோல் செய்தி ஒன்று வந்திறங்கியது. உடல் நலக்குறைவினால் 2 மாத காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஷ்ணு சோலங்கியின் தந்தை சிகிச்சை பலனின்றி கடைசியில் உயிரிழந்தார்.

    தந்தையின் இறுதிச் சடங்கை மொபைல் போன் வழியாகவே பார்க்க முடிந்தது. இரு வாரத்தில் பெண் குழந்தை, தந்தையை இறந்த துக்கத்தை அனுஷ்டிக்க பரோடா, அணி வீரர்கள், எதிரணி வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து ஆடினர். மைதானத்தில் இருநிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    ஊருக்கு செல்ல சோலங்கிக்கு அனுமதி கிடைத்தும் மார்ச் 3ம் தேதி ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆடிய பிறகே ஊர் செல்வேன் என்று முடிவெடுத்தார் சோலங்கி. 29 வயதாகும் சோலங்கி இதுவரை 25 முதல் தர ஆட்டங்களில் ஆடி 6 சதங்களுடன் 1679 ரன்களை எடுத்துள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricket, Ranji Trophy

    அடுத்த செய்தி