ஆஸ்திரேலியாவில் டெண்டுல்கர், கோலி பெயரில் தெருக்கள்... பின்னணியில் மறைந்திருக்கும் சுவாரஸ்யத் தகவல்

ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகணத்தில் தெரு மற்றும் மனைகளுக்கு கிரிக்கெட் பிரபலங்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகணத்தில் டெண்டுல்கர் டிரைவ், கோலி கிரெஸ்ண்ட் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் திருப்பி உள்ளது. இந்திய வீரர்கள் மட்டுமல்ல கிரிக்கெட் ஜாம்பவான்கள் காலிஸ் விலா, தேவ் டெரசஸ், (வாசிம்) அக்ரம் வே, ஸ்டீவ் வாக் தெரு என்றும் வைக்கப்பட்டுள்ளது.

  மெல்டன் சிட்டி பகுதியின் மேற்கு புறநகர் பகுதியான ராக் பேங்கில் இதுப்போன்று தெருக்களுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள ரியல் எஸ்டேட்ஸ் விற்பனையாளர்கள் தான் இதுபோன்ற பெயர்களை வைத்துள்ளனர்.

  இதற்கு காரணமாக ரியல் எஸ்டேடஸ் விற்பனையாளர் வருண் சர்மா கூறுகையில், கிரிக்கெட் பிரபலங்களின் பெயர்களை தெரு மற்றும் மனைகளுக்கு வைத்த பின் இதனை வாங்க பலர் ஆர்வம் காட்டுகின்றனர். கோலி கிரசெண்டில் வாழ யார் ஆர்வம் காட்டமால் இருக்க போகிறார்கள்“ என்றுள்ளார்.

  சச்சின், கோலி போன்றவர்களின் பெயரை வைத்த பின் தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களின் பெயரில் இடம் வாங்க பலர் ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

  இந்திய கிரிக்கெட் வீரரின் ஒரு தெருவிற்கு பெயரிடப்படுவது இது முதல்முறை அல்ல. நியூசிலாந்து தலைநகரான வெலிங்கடனில் சுனில் கவாஸ்கர் என்ற பெயரில் தெரு அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Published by:Vijay R
  First published: