ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்த ‘டிரா’-வை முழுங்கக் கடினமாக இருக்கிறது: ‘பெயினில்’ டிம் பெய்ன் 'கதறல்

இந்த ‘டிரா’-வை முழுங்கக் கடினமாக இருக்கிறது: ‘பெயினில்’ டிம் பெய்ன் 'கதறல்

டிம் பெய்ன்.

டிம் பெய்ன்.

கேட்ச்களை எடுக்கவில்லை, குறிப்பாக நான். எனவே தப்பு என்னுடையதுதான், இதை அப்படியே விட்டு விட்டு பிரிஸ்பனை நோக்கிச் செல்ல வேண்டியதுதான்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சிட்னி டெஸ்ட் போட்டி டிரா ஆகி ஆஸ்திரேலியா தன் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்ததை நினைத்தால் தன்னால் தாங்க முடியவில்லை என்று ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார்.

  407 ரன்கள் வெற்றி இலக்கை எடுத்து வெற்றி பெற்றிருப்போம், ஏதோ ஆஸ்திரேலிய அதிர்ஷ்டம் விராட் கோலி இல்லை, ரஹானே சரியாக ஆடவில்லை, ஹர்திக் பாண்டியா இல்லை. ஜடேஜா காயமடைந்தார். இல்லையெனில் டிம் பெய்னை இன்னும் கொஞ்சம் அழ விட்டிருக்க முடியும்.

  அவருக்கும் அதிர்ஷ்டம் இருந்தது, ஆனால் அதே வேளையில் தானே 3 கேட்ச்களை விட்டதும் அவருக்கு உறுத்துகிறது, பின்னால் நின்று கொண்டு தன் விக்கெட் கீப்பிங்கில் கவனம் செல்த்தாமல் அபத்தமாக ஏதாவது உளறிக்கொட்டிக் கொண்டிருந்தால் என்ன ஆகும் என்பதற்கு டிம் பெய்ன் நடத்தை ஓர் உதாரணம்.

  சதா தொணதொணத்துக் கொண்டே இருக்கிறார். அஸ்வினுடன் வாக்குவாதம், ரிஷப் பந்த்துடன் தகராறு, புஜாராவை கேலி செய்வது என்று கிரிக்கெட் இல்லாத கோணங்கித் தனத்தினால் கேட்ச்களை விட்டு இன்று ஆஸ்திரேலிய ரசிகர்களின் முன்னால் குற்றவாளியாக இருக்கிறார்.

  காயமடைந்த ரிஷப் பந்த் விளாசுகிறார், நகரவே சிரமப்படுகிற ஹனுமா விஹாரியை அசைக்கக் கூட முடியவில்லை, இன்னமும் ஆஸ்திரேலியா தங்களைப்பற்றி பிரமாதமாகப் பேசிக்கொண்டிருந்தால் உலகம் ஏற்குமா என்பதே நம் கேள்வி.

  இந்நிலையில் ஆட்டம் முடிந்து அவர் கூறும்போது, “எங்கள் பந்து வீச்சு குறித்து இன்று காலை நாங்கள் வெற்றி உறுதி என்று தன்னம்பிக்கையுடன் இருந்தோம். வெற்றி பெறுவதற்கான போதிய வாய்ப்புகளை ஏற்படுத்தினோம்.

  இப்படி டிரா ஆனதை எங்களால் முழுங்க முடியவில்லை. கடினமாக உள்ளது. பவுலர்கள் நாள் முழுதும் சிறப்பாக வீசினர். லபுஷேன், நேதன் லயன் அனைத்தையும் முயன்றனர். வேகப்பந்து வீச்சாளர் ஆச்சரியகரமாக வீசினர்.

  கேட்ச்களை எடுக்கவில்லை, குறிப்பாக நான். எனவே தப்பு என்னுடையதுதான், இதை அப்படியே விட்டு விட்டு பிரிஸ்பனை நோக்கிச் செல்ல வேண்டியதுதான்.

  அடிலெய்டில் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மெல்போர்னிலும்தான். இந்த டெஸ்ட்டில்தான் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். நிறைய வாய்ப்புகளை உருவாக்கினோம், கேட்ச்களை விட்டோம், நிறைய எட்ஜ்கள் பீல்டருக்கு முன்னே விழுந்தது. முழுவீச்சுடன் முயன்றோம் எங்கள் வழிக்கு ஆட்டம் வரவில்லை” என்றார்

  Published by:Muthukumar
  First published:

  Tags: India vs Australia, Rishabh pant, Sydney