ICC Women's T20 World Cup | டாப் ஆர்டர் பேட்டிங், தரமான சுழற்பந்து... இந்திய மகளிர் அணியின் பலம்

ICC Women's T20 World Cup | டாப் ஆர்டர் பேட்டிங், தரமான சுழற்பந்து... இந்திய மகளிர் அணியின் பலம்
இந்திய மகளிர் அணி
  • Share this:
ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சில் பலமாக வாய்ந்த அணியாக திகழ்கிறது.

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நாளை(பிப்.21) தொடங்க உள்ளது. முதல் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்திய அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஹனுமன்ப்ரித் கவுர், ஸ்மிருத்தி மந்தனாவும் பந்துவீச்சில் கயக்வாட், யாதவ் மிரட்ட உள்ளனர்.

மிரட்டும் ஸ்மிருதி மந்தனா


இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கும் மந்தனா நம்பிக்கை நட்சத்திர வீரங்கனையாக உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக  டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனை என்ற சாதனையும் படைத்துள்ளார். கடந்த 2018 ஜனவரி முதல் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கும் இவர் 42 போட்டிகளில் 1,243 ரன்கள் விளாசி உள்ளார். சராசரி 31.07 மற்றும் ஸ்டிரைக் ரேட் 129.61 என அபாரமாக விளையாடி உள்ளார்.



சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியில் 5 போட்டிகளில் விளையாடி 216 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா சூழலுக்கு ஏற்றவாறு ஆடக் கூடியவர் மந்தனா. 2016 மற்றும் 2018 பிக் பாஸ் லீக் போட்டிகளிலும் மந்தனா விளையாடி உள்ளார்.மிடில் ஆர்டர் தூண் கவுர்

கேப்டன் கவுர் மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு மிகப் பெரிய பலமாக உள்ளார். கவுர் 97 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 2,156 எடுத்துள்ளார். மிதாலி ராஜூக்கு அடுத்து கேப்டனாக பல போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தவர்.

இந்திய வீராங்கனைகளில் டி20 போட்டியில் சதம் அடித்த ஒரே வீராங்கனை கவுர் தான். 2018-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 51 பந்துகளில் 103 ரன்கள் விளாசினார். டி20 உலகக்கோப்பையில் மொத்தம் 25 போட்டிகளில் விளையாடி 428 ரன்கள் குவித்துள்ளார்.

இந்திய அணி தொடக்க வீராங்கனைகளை இழந்து தடுமாறிய பல போட்டிகளில் கவுர் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்று கொடுத்தள்ளார்.



தொடக்க வீராங்கனையாக களமிறங்கும் 16 வயதான ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியில் 28 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார். 14 போட்டிகளில் விளையாடிய இவரது ஸ்டிரைக் ரேட் 140.86 ஆக உள்ளது.

161 டி20 போட்டிகளில் விளையாடி 2165 ரன்கள் குவித்துள்ள வேதா கிருஷ்ணமூர்த்தி அணியின் அனுபவ வீரராக உள்ளார். இவரும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் பிக் பாஸ் தொடரில் விளையாடி உள்ளார்.

அசத்தும் ஆல் ரவுண்டர்கள்

தீப்தி சார்மா : சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் வலதுகை பந்துவீச்சாளராக உள்ளார். 43 போட்டிகளில் பந்துவீசி 49 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார் தீப்தி . வெளிநாடுகளில் இவர் ஓவருக்கு சராசரியாக 5.88 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து சிறந்த ஃபார்மில் உள்ளார்.

ஷிகா பாண்டே : வலது கை பந்துவீச்சாளரான இவர் 100 போட்டிகளில் விளையாடி 81 விக்கெட்களை எடுத்துள்ளார். பேட்டிங்கிலும் சிறந்த ஸ்டிரைக் கொண்டுள்ளார்.

பந்துவீச்சில் தாக்கும் கயக்வாட், யாதவ்

இடதுக்கை சுழற்பந்து வீச்சாளரான ராஜேஸ்வரி கயக்வாட் டி20 போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வருகிறார். 23 போட்டிகளில் 30 விக்கெட்களை வீழ்த்தி பந்துவீச்சு சராசரியாக 17.46 வைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா முத்தரப்பு போட்டியில் அதிகமான விக்கெட்களை இவர் வீழ்த்தினார். 5 போட்டிகளில் விளையாடி கயக்வாட் 10 விக்கெட்களை வீழ்த்தினார்.



பூனம் யாதவ் : சிறந்த லெக் ப்ரேக் கூகுளி பந்து வீச்சாளரான இவர் டி20 அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர். 62 போட்டிகளில் பந்துவீசி 85 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

இவருடைய பந்து வீச்சு சராசரியான 14.68 தான் டி20 போட்டிகளில் சிறந்த ஒன்று. மிகவும் குறைவான ரன்களை மட்டுமே டி20 போட்டியில் இவர் விட்டு கொடுத்துள்ளார். பூனம் 13 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

Also see:

First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்