2022-ஆம் ஆண்டின் டாப் 5 டி20 பேட்ஸ்மேன்களை இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா வரிசைப்படுத்தியுள்ளார். இதில் விராட்கோலிக்கு 3ஆம் இடம் அளிக்கப்பட்டுள்ளது. டி20-யில் முன்னணி பேட்ஸ்மேனாக இருக்கும் பாகிஸ்தானின் பாபர் ஆசமிற்கு இந்த டாப் 5-யில் இடமில்லை. ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு பேட்ஸ்மேன்களை வரிசைப்படுத்தியுள்ளார்.
இதன்படி இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தையும், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 2ஆம் இடத்தையும், இந்தியாவின் விராட் கோலி 3ஆம் இடத்தையும், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா 4ஆம் இடத்தையும், நியூசிலாந்து அணியின் டெவோன் கான்வே 5ஆம் இடத்தையும் பிடித்துள்ளார்கள்.
விராட் கோலிக்கு 3ஆம் இடம் அளித்தது குறித்து கூறும் ஆகாஷ் சோப்ரா, ‘நல்ல ஃபார்மில் இல்லாமல் கோலி கடந்த சில ஆண்டுகளாக தடுமாறி வருகிறார். அவரால் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாட முடியவில்லை. அவருக்கு எல்லாம் சரியாக அமையாமல் எதிராய் அமைந்து விட்டன. ஆனால் 2022 இறுதியில் கோலி ஓரளவு ஃபார்மிற்கு திரும்பி விட்டார்.
சர்வதேச டி20-ல் 20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 781 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 55.78 ஆக உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் 138.23. உலகக்கோப்பை டி20 தொடரில் கோலியின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு மைதானம் ஒத்துழைக்கவில்லை. ஆனாலும் கோலி சிறப்பாக விளையாடினார்.
பாகிஸ்தானின் பாபர் ஆசம் 26 போட்டிகளில் விளையாடி 735 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 32 மட்டுமே. ஸ்ட்ரைக் ரேட்டும் 123 என குறைவாக உள்ளது. எனவே அவரை டாப் 5 பேட்ஸ்மேன்களில் சேர்க்கவில்லை.’ என்று கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket