Ashes Party| ஆஷஸ் வெற்றிப் பார்ட்டியில் விடிய விடிய குடித்து ரகளை- போலீஸ் நுழைந்து வீரர்களை அனுப்பி வைத்ததால் பரபரப்பு
Ashes Party| ஆஷஸ் வெற்றிப் பார்ட்டியில் விடிய விடிய குடித்து ரகளை- போலீஸ் நுழைந்து வீரர்களை அனுப்பி வைத்ததால் பரபரப்பு
ஆஷஸ் பார்ட்டி
ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியதையடுத்து இரு அணி வீரர்களும் இரவு மதுபோதை விருந்தில் கலந்து கொண்ட போது விடுதியில் பயங்கரமாக கூச்சல் போட்டு ஆர்பாட்டம் செய்ததாகப் புகார் எழுந்ததில் போலீஸ் தலையிட்டு விஷயத்தை முடிக்க நேரிட்டது.
ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியதையடுத்து இரு அணி வீரர்களும் இரவு மதுபோதை விருந்தில் கலந்து கொண்ட போது விடுதியில் பயங்கரமாக கூச்சல் போட்டு ஆர்பாட்டம் செய்ததாகப் புகார் எழுந்ததில் போலீஸ் தலையிட்டு விஷயத்தை முடிக்க நேரிட்டது.
இந்த விஷயத்தில் இங்கிலாந்து பயிற்சியாளர் கிரகாம் த்ரோப் சிக்கியுள்ளார். அவர் பதவிக்கு ஆபத்து நேர்ந்துள்ளது. இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளர் கிரஹாம் தோர்ப், ஹோபார்ட் ஹோட்டலில் ஆஷஸுக்குப் பிந்தைய மதுவிருந்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து, ஹோட்டலில் தங்கியிருந்தவர்களின் புகார்களுக்குப் பிறகு காவல்துறையின் தலையீட்டைக் கண்டதைத் தொடர்ந்து அவர் பதவி நீக்கத்தை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் காலை 6 மணி வரை மது அருந்துவது போன்ற காட்சி வீடியோ வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியான தகவல்களின் படி, மதுவிருந்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஆஸ்திரேலிய நேதன் லயன், டிராவிஸ் ஹெட் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் அடங்குவர். விருந்தின் வீடியோவை பயிற்சியாளர் தோர்ப் தானே எடுத்தார், மேலும் அந்த வீடியோவில் அவர் கூறியது, “நாங்கள் நேதன் லயன், ரூட், கேரி மற்றும் ஆண்டர்சன் உள்ளனர். வக்கீல்களுக்காக இதை வீடியோவாக மட்டும் தருகிறேன். காலையில் எல்லோரையும் சந்திப்போம்.” என்றார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும், சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
"திங்கட்கிழமை அதிகாலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளின் வீரர்கள் ஹோபார்ட்டில் உள்ள ஹோட்டலின் மது பான விருந்தில் ஈடுபட்டனர்" என்று ECB ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹோட்டல் நிர்வாகத்திடம் மற்றவர்கள் புகார் அளித்தனர், வீரர்களின் கூச்சல் அதிகரிக்க அதிகரிக்க பிரச்சனை மூண்டது. இதனையடுத்து உள்ளூர் காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்றது. ஹோட்டல் நிர்வாகமும், டாஸ்மேனியன் போலீசாரும் வெளியேறச் சொன்னபோது, சம்பந்தப்பட்ட வீரர்கள் அங்கிருந்து வெளியேறி அந்தந்த ஹோட்டல் அறைகளுக்குத் திரும்பினர்.
“இங்கிலாந்து அணி நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இதனை மேலும் விசாரிக்கும். அதுவரை, நாங்கள் கருத்து எதுவும் தெரிவிக்க மாட்டோம்,'' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இருதரப்பு வாரியங்களுக்கும் பெரிய தர்ம சங்கடத்தை உருவாக்கியுள்ளது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.