Home /News /sports /

ஜஸ்டின் லாங்கர் ராஜினாமா சூறாவளி- நடந்தது என்ன?- மவுனத்தை உடைத்த பாட் கமின்ஸ்

ஜஸ்டின் லாங்கர் ராஜினாமா சூறாவளி- நடந்தது என்ன?- மவுனத்தை உடைத்த பாட் கமின்ஸ்

லாங்கர்-பாட் கமின்ஸ்

லாங்கர்-பாட் கமின்ஸ்

ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரின் ராஜினாமா குறித்து ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் புதன்கிழமை தனது மௌனத்தை உடைதார். எதிர்காலத்தில் அணிக்கு "புதிய பயிற்சி முறை" தேவை என்று கூறினார். மேலும், அனைத்து துணை ஊழியர்கள் மற்றும் வீரர்களும் இந்த கருத்தைத் தெரிவித்தனர், இதனையடுத்தே லாங்கருக்கு சிறிய நீட்டிப்பு வழங்கப்பட்டது, ஆனால் லாங்கர் ஏற்காமல் வெளியேறினார்.

மேலும் படிக்கவும் ...
    ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரின் ராஜினாமா குறித்து ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் புதன்கிழமை தனது மௌனத்தை உடைதார். எதிர்காலத்தில் அணிக்கு "புதிய பயிற்சி முறை" தேவை என்று கூறினார். மேலும், அனைத்து துணை ஊழியர்கள் மற்றும் வீரர்களும் இந்த கருத்தைத் தெரிவித்தனர், இதனையடுத்தே லாங்கருக்கு சிறிய நீட்டிப்பு வழங்கப்பட்டது, ஆனால் லாங்கர் ஏற்காமல் வெளியேறினார்.

    தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரின் ராஜினாமாவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா சனிக்கிழமை ஏற்றுக்கொண்டது. "ஜஸ்டினுக்கு அவரது தற்போதைய ஒப்பந்தத்திற்கு குறுகிய கால நீட்டிப்பு வழங்கப்பட்டது, துரதிர்ஷ்டவசமாக அவர் அதை ஏற்கவில்லை" என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது. இதற்குப் பிறகு, முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், கம்மின்ஸை "தைரியமற்றவர்" என்று முத்திரை குத்தினார், மேலும் டெஸ்ட் கேப்டன் தனது சொந்த பயிற்சியாளரைக் கொண்டுவருவதற்காக பாட் கமின்ஸ் முயற்சி செய்வதாகச் சாடினார்.

    இந்த விவகாரத்தில் முன்னாள் வீரர்கள் பலர் ஜஸ்டின் லாங்கருக்கு ஆதரவாகப் பேச பாட் கமின்ஸ் அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாகக் கூறிய போது,

    "பல முன்னாள் வீரர்கள் என்னைத் தொடர்பு கொண்டு அமைதியாக தங்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர், இது வரவேற்கத்தக்கது. மேலும் சிலர் ஊடகங்களில் பேசினர் - இதுவும் வரவேற்கத்தக்கது மற்றும் விளையாட்டின் மீதான காதல் மற்றும் அவர்கள் கால சகவீரருக்காக அவர்கள் பேசுகின்றனர். கடந்த கால வீரர்களே, நான் இதைச் சொல்ல விரும்புகிறேன்: நீங்கள் எப்போதும் உங்கள் கால சகவீரருக்காக நிற்கிறீர்களோ அது போலவே, என்னுடைய சக வீரர்களுக்காக நான் உறுதியாக இருக்கிறேன்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜஸ்டின் லாங்கர் ராஜினாமா செய்ததில் இருந்து பல பொது கருத்துக்கள் வந்தவண்ணம் உள்ளன. . ஒரு நல்ல காரணத்திற்காக, நான் இதற்கு முன் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. இப்போது ஜஸ்டின் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். அவரும் தன் கருத்துக்களை தெரிவித்துள்ளார், மற்றவர்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதனால் நானும் இப்போது மவுனம் கலைக்கின்றேன்.

    ஜஸ்டின் தனது பாணி தீவிரமானது என்று ஒப்புக்கொண்டார், அவர் தனது தீவிரத்திற்காக வீரர்கள் மற்றும் ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார், மேலும் வீரர்களும் அவரது தீவிர பாணியை விரும்பினர் ஆகவே அவரது மன்னிப்பு தேவையற்றது என்று நினைக்கிறேன். அவரது தீவிரம் வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரர்களாக இருக்க, இந்த உறுதியான அடித்தளத்தில் இருந்து, எங்களுக்கு புதிய பயிற்சி மற்றும் திறன் வளர்ச்சித் தேவை என்று உணர்ந்தோம்.

    இதே கருத்துக்களைத்தான் வீரர்களும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு அளித்தனர், துணை ஊழியர்களும் இதையே தெரிவித்ததாகவே நான் நினைக்கிறேன். மாற்றத்திற்கான தைரியமான ஒரு முடிவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா எடுத்துள்ளது. அதுவும் அணி வெற்றி பெறும்போது இப்படி ஒரு முடிவெடுக்க தைரியம் வேண்டும். நான் இந்தப் பொறுப்பை சீரியசாக எடுத்துக் கொள்கிறேன். நான் இதைத்தான் வாழ்கிறேன் இதைத்தான் மூச்சுக்காற்றாக சுவாசிக்கிறேன். எங்களுக்கும் எங்கல் சக வீரர்களுக்கான கடமை உள்ளது. ” என்று தன் அறிக்கையில் கூறியுள்ளார் பாட் கமின்ஸ்

    ஜஸ்டின் லாங்கருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்த நீட்டிப்பு ஒரு முழுமையான மறுஆய்வுக்குட்பட்ட செயல்முறையின் விளைவாகும், இது அணியின் எதிர்கால தேவைகள் மற்றும் வரவிருக்கும் தொடர்கள் உட்பட பல காரணிகளை மதிப்பீடு செய்தது. இந்த நீட்டிப்பு CA வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டு நேற்று இரவு ஜஸ்டினுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பை கோப்பையை காப்பாற்றும் வாய்ப்பும் இதில் அடங்கும். ஆனால் லாங்கர் ஏற்காமல் ராஜினாமா செய்தார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ashes 2021-22, Australia vs England, Justin Langer, Pat Cummins

    அடுத்த செய்தி