டி.என்.பி.எல்: தூத்துக்குடி, காரைக்குடி அணிகளின் பெயர்கள் மாற்றம்..!

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நடப்பு தொடரிலிருந்து டியூட்டி பேட்ரியார்ட்ஸ் ( தூத்துக்குடி), காரைக்குடி காளை அணிகள?

டி.என்.பி.எல்: தூத்துக்குடி, காரைக்குடி அணிகளின் பெயர்கள் மாற்றம்..!
TNPL
  • News18 Tamil
  • Last Updated: February 19, 2020, 10:41 PM IST
  • Share this:
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நடப்பு தொடரிலிருந்து டியூட்டி பேட்ரியார்ட்ஸ் ( தூத்துக்குடி), காரைக்குடி காளை அணிகள் -  சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் என்ற பெயரில் களமிறங்கவுள்ளது.

சென்னை, நத்தம் மற்றும் திருநெல்வேலியில் நடைபெற்று வந்த டி.என்.பி.எல் போட்டிகள் சேலம் மற்றும் கோவையில் புதிதாக திறக்கப்பட்ட மைதானங்களிலும் நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

டி.என் .பி.எல் போடியின் 5-வது தொடரில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளது. ஜூன் 10 முதல் ஜூலை 12 வரை ஆட்டம் நடைபெறுகிறது. எட்டு அணிகளும் அணியின் முக்கிய வீரர்களை தக்கவைத்து கொண்டுள்ளன. இந்திய அணியில் விளையாடிய ரவிச்சந்திரன் அஷ்வின், முரளி விஜய், தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் போன்ற  வீரர்கள் எதிர்பார்த்தது போலவே  தங்களது அணிகளால் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.


கௌஷிக் காந்தி, பாபா அபராஜித் மற்றும் சாய் கிஷோர் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் தங்களது அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக 22 வீரர்களும், குறைந்தபட்சமாக 16 வீரர்களும் எடுத்துக்கொள்ளலாம். 5 வது சீசன் டி.என்.பி.எல்  தொடருக்கான வீரர்கள் தேர்வில்  633 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.  A, B1, B2, C உள்ளிட்ட 4 பிரிவுகளில் வீரர்களின் தகுதிக்கேற்ப பிரிக்கப்பட்டுள்ளனர்.
First published: February 19, 2020, 10:41 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading