இளம்வீரர்களை ஊக்குவிக்கும் தளமாக திகழ்கிறது டி.என்.பி.எல்: கேதர் ஜாதவ் பெருமிதம்

Web Desk | cricketnext
Updated: July 20, 2019, 1:39 AM IST
இளம்வீரர்களை ஊக்குவிக்கும் தளமாக திகழ்கிறது டி.என்.பி.எல்: கேதர் ஜாதவ் பெருமிதம்
Web Desk | cricketnext
Updated: July 20, 2019, 1:39 AM IST
கிரிக்கெட் போட்டிகளில் இளம்வீரர்களை ஊக்குவிக்கும் தளமாக டி.என்.பி.எல் அமைந்துள்ளதாக இந்திய அணி ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வாரியம் நடத்தும் டி.என்.பி.எல் தொடர் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை - திண்டுக்கல் அணிகள் மோதின. இந்த போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ் பங்கேற்றார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து கேதர் ஜாதவ் பேசியாதாவது; இது போன்ற தொடர்கள் வீரர்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை மேலும் ஊக்குவித்து அவர்களை ஐபிஎல், ராஞ்சி இடம்பெற மிகவும் உதவுகிறது.

டி.என்.பி.எல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்களுக்கு ஐபிஎல் அணியில் இடம்பெற அதிகபடியான வாய்ப்பு உள்ளது. டி.என்.பி.எல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய நராராயணன் ஜெகதீசன் சென்னை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்வரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அவர் அணிக்கு பெறுமை சேர்ப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் நான் சரியாக விளையாடவில்லை இருப்பினும் வாழ்க்கை நமக்கு நிறைய பாடங்களை கற்று தருகிறது என்றார் கேதர் ஜாதவ்.
First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...