டி.என்.பி.எல்: சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற காரைக்குடி காளை!

தொடக்க வீரர் முரளி விஜய் அபாரமாக விளையாடி 81 ரன்கள் எடுத்தார். பரபரப்பான சென்ற இந்தப் போட்டியில் திருச்சி அணியும் 171 ரன்கள் எடுத்ததால் போட்டி டிரானாது.

Web Desk | news18
Updated: July 20, 2019, 10:48 PM IST
டி.என்.பி.எல்: சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற காரைக்குடி காளை!
டி.என்.பி.எல்
Web Desk | news18
Updated: July 20, 2019, 10:48 PM IST
ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் காரைக்குடி காளை அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றது.

டி.என்.பி.எல் தொடரில் ரூபி திருச்சி வாரியர்ஸ் - காரைக்குடி காளை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

காரைக்குடி காளை அணியின் தொடக்க வீரர்களாக ஆதித்யா, ஸ்ரீகாந்த் அனிருத்தா களமிறங்கினர். ஆதித்யா 1 ரன்னிலும் அவரை அடுத்து களமிறங்கிய சூர்யபிரகாஷ் 12 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினார்.


கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருதா அதிரடியான ஆட்டத்தால் காரைக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. ஸ்ரீகாந்த் அனிருதா அதிகபட்சமாக 58 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. தொடக்க வீரர் முரளி விஜய் அபாரமாக விளையாடி 81 ரன்கள் எடுத்தார். பரபரப்பான சென்ற இந்தப் போட்டியில் திருச்சி அணியும் 171 ரன்கள் எடுத்ததால் போட்டி டிரானாது.

போட்டி டிராவானதை அடுத்து சூப்பர் ஓவர் முறையில் திருச்சி அணி முதலில் விளையாடியது. சூப்பர் ஓவரில் முரளி விஜயும், கணபதியும் களம் இறங்கி 12 ரன்கள் எடுத்தனர். காரைக்குடி காளை அணியில் ஸ்ரீகாந்த் அனிருத்தா, ராஜ்குமார் களமிறங்கினார்.

Loading...

சூப்பர் ஓவரில் அதிரடி காட்டிய காரைக்குடி அணி எளிதில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை காரைக்குடி அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருத்தா பெற்றார். இவர் வேறு யாரும் அல்ல இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் மகன்.
First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...