டி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக்... மற்றொரு அணி?

Web Desk | news18-tamil
Updated: August 12, 2019, 2:56 PM IST
டி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக்... மற்றொரு அணி?
டி.என்.பி.எல்
Web Desk | news18-tamil
Updated: August 12, 2019, 2:56 PM IST
டி.என்.பி.எல் இறுதிப்போட்டிக்கு முன்னேற மதுரை பாந்தர்ஸ் - காஞ்சி வீரன்ஸ் அணியும் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளன.

டி.என்.பி.எல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து ப்ளே ஆப் சுற்றுக்கு சென்னை சேப்பாக், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், காஞ்சி வீரன்ஸ் அணிகள் முன்னேறின.

திருநெல்வேலியில் நடைபெற்ற குவாலிபையர் சுற்றில் சென்னை சேப்பாக் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சேப்பாக் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக தொடக்கவீரர் ஸ்ரீதர் ராஜூ 81 ரன்கள் குவித்தார்.கடின இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி சென்னை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் திண்டுக்க் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்து. சென்னை சேப்பாக் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறிது.மற்றொரு ப்ளே ஆஃப் போட்டியின் எலிமினேட்டர் முதல் போட்டியில் காஞ்சி வீரன், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இதனையடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேற குவாலிபையர் சுற்றில் தோல்வியடைந்த திண்டுக்கல் அணியும், எலிமினேட்டர் முதல் போட்டியில வெற்றியடைந்த மதுரை அணியும் எலிமினேட்டர் 2வது சுற்றில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்த போட்டியில் வெற்றியடையும் அணி ஆகஸ்ட் 15ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோதும்.

Also Watch

First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...