டி.என்.பி.எல் தொடரில் தகுதி சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகள்...

கோவை, காஞ்சி அணிகளில் எந்த அணி தகுதிசுற்றுக்கு முன்னேறும் என்பது இன்று நடைபெறும் போட்டியின் முடிவில் தான் உள்ளது.

Web Desk | news18
Updated: August 9, 2019, 5:33 PM IST
டி.என்.பி.எல் தொடரில் தகுதி சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகள்...
TNPL
Web Desk | news18
Updated: August 9, 2019, 5:33 PM IST
டி.என்.பி.எல் தொடரின் லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி தகுதி சுற்றுக்கு முதல் அணியாக நுழைந்துள்ளது.

டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல், மதுரை, சென்னை, கோவை, காஞ்சி, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி உள்ளிட் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. தொடரில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோத வேண்டும். புள்ளிப்பட்டியிலில் முதல் 4 இடத்தை பிடிக்கும் அணிகள் தகுதிசுற்றுக்கு முன்னேறும்.

டி.என்.பி.எல் தொடரின் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடத்தில் திண்டுக்கல், மதுரை, சென்னை, கோவை அணிகள் உள்ளன. இதில் திண்டுக்கல், மதுரை அணிகள் தகுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன. சென்னை அணியும் தகுதிசுற்றுக்கு முன்னேற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. 4வது இடத்திற்கு தான் போட்டி நிலவுகிறது.



கோவை, காஞ்சி அணிகளில் எந்த அணி தகுதிசுற்றுக்கு முன்னேறும் என்பது இன்று நடைபெறும் போட்டியின் முடிவில் தான் உள்ளது. கோவை 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. காஞ்சி அணி 5வது இடத்தில் உள்ளது. கோவை அணிக்கு அனைத்து லீக் போட்டிகளிலும் முடிவடைந்த நிலையில் காஞ்சிபுரம் அணி, இன்று திருச்சி அணியுடன் மோதுகிறது.

திருச்சி அணிக்கு எதிரான லீக் போட்டியில் காஞ்சிபுரம் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் தகுதி சுற்றுக்கு முன்னேறும். இன்று நடைபெறும் மற்றொரு லீக் போட்டியில் சென்னை அணியும், தூத்துக்குடி அணியும் மோதுகின்றன.

Also Read : Fact Check : காஷ்மீரில் தோனிக்கு எதிராக கோஷமிடப்பட்டதா?

Also Read : ஜிம்பாப்வே அணிக்கு பதிலாக களமிறங்கும் புதிய அணி! ஐசிசி அதிரடி

Also Read : ஆஷஸ் தொடரில் அடுத்தடுத்து விலகும் இங்கிலாந்து வீரர்கள்!

Also Read : அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனைகள் பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர்
First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...