TNPL 2021 Schedule | டிஎன்பிஎல் 2021 தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிப்பு

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் ஜூன் 4 முதல் ஜூலை 4 வரை நடைபெறும் என  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் ஜூன் 4 முதல் ஜூலை 4 வரை நடைபெறும் என  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  • Share this:
ஐந்தாவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஜூன் 4-ம் தேதி முதல் ஜூலை 4 வரை திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம், கோவை என நான்கு நகரங்களில் நடைபெறவுள்ளது.
ஐ.பி.எல். பாணியில் தமிழகத்தில் சேலம், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய எட்டு நகரங்களை மையமாக கொண்ட அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் 2016 ம் தொடங்கப்பட்டது.

நான்கு ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டநிலையில் கடந்த ஆண்டு கொரோனோ பரவல் அச்சுருத்தலால் ஐந்தாவது சீசன் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டு தொடருக்கான போட்டி அட்டவணையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று நடப்பாண்டிற்கான டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனோ பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜூன் 4 ம் தேதி தொடங்கும் முதல் கட்ட போட்டிகள் திருநெல்வேலியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம், கோவை நகரங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சேலம், கோவை மைதாங்களில் முதல் முறையாக டி.என்.பி.எல் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

Also Read : நான் சரியாக ஆடவில்லை, நிறைய பந்துகளை விரயம் செய்தேன், தோல்விக்கு முழு பொறுப்பு நானே: வார்னர் மனம் திறப்பு

மொத்தம் 32 போட்டிகளை கொண்ட இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் நான்கு மைதாங்களிலும் நடத்தப்படவுள்ளன. இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள்  கோவை, சேலத்திலும் இறுதிப்போட்டி சேலம் மைதானத்திலும் நடத்தப்படவுள்ளன.



ஐ.பி.எல் போட்டி முடிந்தவுடன் தமிழக வீரர்கள் டி.என்.பி.எல். போட்டி தயாராகவுள்ளனர். ஜூலை 4 ம் தேதி சேலம் மைதானத்தில் நடப்பாண்டிற்கான டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. வீரர்கள் அனைவரும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு பிசிசிஐ விதிமுறைப்படி வீரர்கள் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தீவிர பாதுகாப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

Also Read : இனிமேல் இந்தியில் பேச முடியாது... ஸ்டெம்ப் மைக்கில் பதிவான தோனியின் உரையாடல்

தமிழகத்தில் கொரோனோ பரவல் அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டியை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
Published by:Vijay R
First published: