டி.என்.பி.எல் இறுதிப் போட்டியில் சென்னை அணி பேட்டிங் தேர்வு!

டி.என்.பி.எல் இறுதிப் போட்டியில் சென்னை அணி பேட்டிங் தேர்வு!
டி.என்.பி.எல்
  • Share this:
டி.என்.பி.எல் தொடரில் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் அணிக்கான எதிரான போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லிஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

டி.என்.பி.எல் தொடர் திண்டுக்கல் மைதானத்தில் ஜூலை 19ம் தொடங்கியது. முதல் போட்டியில் திண்டுக்கல் - சென்னை அணிகள் மோதின. இதே அணிகள் இறுதிப் போட்டியில் மோதுவது டி.என்.பி.எல் போட்டியின் ஒரு சுவராஸ்மாயனா நிகழ்வு தான்.

நடப்பு டி.என்.பி.எல் தொடரில் இந்த இரு அணிகளும் இரண்டு முறை நேருக்கு நேர் மோதி உள்ளது. லீக் போட்டியில் திண்டுக்கல் அணியும், குவாலிபையர் போட்டியில் சென்னை அணியும் வெற்றி பெற்றது.
சென்னையில் தற்போது மேகமூட்டத்துடன் காணப்படுவதால் போட்டியின் நடுவே மழை குறுக்கிட வாய்ப்புள்ளதால் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.

சென்னை அணி : கங்கா ஸ்ரீதர் ராஜூ, கோபிநாத், கௌசிக் காந்தி (கேப்டன்), விஜய் சங்கர், சசிதேவ், ஹரிஸ் குமார், முருகன் அஸ்வின், உமாசங்கர் சுசில்(விக்கெட் கீப்பர்), சித்தார்த், பெரியசாமி, அலெக்ஸாண்டர்

திண்டுக்கல் அணி : ஹரி நிசாந்த், ஜெகதீசன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), விவேக், சதுர்வேத், முகஹமது, சுமந்த் ஜெயின், ராமலிங்கம் ரோஹித், ஜெகநாதன் கௌசிக், முகமது அபிநவ், சிலம்பரசன், பிரனிஷ்
First published: August 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading