டி.என்.பி.எல்: சொந்த மைதானத்தில் 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா சென்னை?

சென்னையில் தற்போது மேகமூட்டத்துடன் காணப்படுவதால் போட்டியின் நடுவே மழை குறுக்கிட வாய்ப்புள்ளதால் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

டி.என்.பி.எல்: சொந்த மைதானத்தில் 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா சென்னை?
டி.என்.பி.எல்
  • Share this:
டி.என்.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியின் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

டி.என்.பி.எல் தொடர் திண்டுக்கல் மைதானத்தில் ஜூலை 19-ம் தொடங்கியது. முதல் போட்டியில் திண்டுக்கல் - சென்னை அணிகள் மோதின. இதே அணிகள் இறுதிப் போட்டியில் மோதுவது டி.என்.பி.எல் போட்டியின் ஒரு சுவராஸ்யமான நிகழ்வு.

நடப்பு டி.என்.பி.எல் தொடரில் இந்த இரு அணிகளும் இரண்டு முறை நேருக்கு நேர் மோதி உள்ளது. லீக் போட்டியில் திண்டுக்கல் அணியும், குவாலிபையர் போட்டியில் சென்னை அணியும் வெற்றி பெற்றது.


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது மேகமூட்டத்துடன் காணப்படுவதால் போட்டியின் நடுவே மழை குறுக்கிட வாய்ப்புள்ளதால் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.சென்னை அணியில் விஜய் சங்கர் இருப்பது மிகப் பெரிய பலமாக இருக்கிறது என அந்த அணியின் கேப்டன் கவுசிக் காந்தி கூறியுள்ளார். சென்னை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ் மேனாக கவுசிக் காந்தியும், கங்கா ஸ்ரீதர் ராஜூ உள்ளனர்.

திண்டுக்கல் அணியில் கேப்டன் ரவிசந்திரன் அஸ்வின் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தி வருகிறார். குவாலிபையர் போட்டியில் திண்டுக்கல் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.சொந்த மைதானத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு சென்னை அணி ஆர்வமாக உள்ளது. 2017-ம் ஆண்டு தூத்துகுடியை அணியை வீழ்த்தி சென்னை அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

அதேப்போன்று அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி சென்னை அணியை வீழ்த்தி முதன்முறையாக பட்டத்தை வெல்ல துடிப்புடன் உள்ளது. சென்னை - திண்டுக்கல் அணிகள் சமபலத்தில் மோதுவதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

Also Watch

First published: August 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading