TNPL 100-வது போட்டி... ரவிசந்திரன் அஸ்வின் கேக் வெட்டி கொண்டாட்டம்

மாவட்டங்களில் இருந்து வீரர்களை முன்னிலையில் கொண்டு வருவதில் டி.என்.பி.எல் முக்கிய பங்கு வகிக்கிறது.

Web Desk | news18
Updated: July 22, 2019, 10:11 PM IST
TNPL 100-வது போட்டி... ரவிசந்திரன் அஸ்வின் கேக் வெட்டி கொண்டாட்டம்
ரவிசந்திரன் அஸ்வின் கேக் வெட்டி கொண்டாட்டம்
Web Desk | news18
Updated: July 22, 2019, 10:11 PM IST
டி.என்.பி.எல் 100வது போட்டி தொடரின் சிறந்த மைல்கல் என இந்திய அணி வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வாரியம் நடத்தும் டி.என்.பி.எல் தொடரின் 100வது போட்டியில் திண்டுக்கல் - மதுரை அணிகள் மோதின. இந்த தொடரின் 100வது போட்டி என்பதால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிசந்திரன் அஸ்வின், 100வது போட்டி தொடரின் சிறந்த மைல்கல் என்று பாராட்டினார். மேலும், “டி.என்.பி.எல் போட்டிகள் என் இதயத்திற்கு நெருக்கமாக உள்ளது.

100வது போட்டியை எட்டியுள்ள இந்த தொடர் 1000வது போட்டி விரைவில் நடக்குமென நான் எதிர்பார்க்கிறேன். நானும் அதில் கொஞ்சம் பங்கு வகிக்க விரும்புகிறேன்.

மாவட்டங்களில் இருந்து வீரர்களை முன்னிலையில் கொண்டு வருவதில் டி.என்.பி.எல் முக்கிய பங்கு வகிக்கிறது. அடிமட்டத்தில் அதிக வீரர்களை உருவாக்குவது தான் சிந்தனை. டி.என்.பி.எல் தொடர் ரசிகர்களிடையே நல்ல மதிப்பை பெற்றுள்ளது“ என அஸ்வின் கூறியுள்ளார்.

Also Watch

First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...