முகப்பு /செய்தி /விளையாட்டு / விஜய் ஹசாரே டிராபி தமிழக அணியிலிருந்து யார்க்கர் நடராஜன் விடுவிப்பு

விஜய் ஹசாரே டிராபி தமிழக அணியிலிருந்து யார்க்கர் நடராஜன் விடுவிப்பு

தங்கராசு நடராஜன்

தங்கராசு நடராஜன்

பிசிசிஐ கோரிக்கைக்கு ஏற்ப விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணியிலிருந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் யார்க்கர் நடராஜன் விடுவிக்கப்பட்டார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பிசிசிஐ கோரிக்கைக்கு ஏற்ப விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணியிலிருந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் யார்க்கர் நடராஜன் விடுவிக்கப்பட்டார்.

அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான குறைந்த ஓவர் வெள்ளைப்பந்து  தொடருக்கு நடராஜன் புத்துணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழ்நாடு அணியிலிருந்து நடராஜனை விடுவிக்கக் கோரி பிசிசிஐ கேட்டிருந்தது, அதனடிப்படையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அவரை விடுவித்துள்ளது.

இதனையடுத்து பிப்.13ம் தேதி இந்தூர் செல்லும் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் ஆர்.எஸ். ஜெகநாத் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 20ம் தேதி விஜய் ஹசாரே டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது, இதற்கான 20 பேர் கொண்ட உத்தேச அணியில் நடராஜன் இடம்பெற்றிருந்தார்.

தமிழ்நாடு சமீபத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையில் சையத் முஷ்டாக் அலி டி20  டிராபியை வென்றிருந்தது. மார்ச் 12ம் தேதி அகமதாபாத்தில் முதல் டி20 போட்டி தொடங்குகிறது, இது 5 டி20 போட்டிகளுக்கான தொடராகும். முதல் ஒருநாள் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்குகிறது.

இதே அகமதாபாதில்தான் தமிழ்நாடு அணி சையத் முஷ்டாக் அலி டிராபியை வென்றது. இந்நிலையில்தான் இந்திய அணிக்கு சமீபமாக ஆஸ்திரேலியாவில் பிரமாதமாக ஆடிய நடராஜனை இங்கிலாந்து டி20, ஒருநாள் தொடருக்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விடுவித்துள்ளது.

ஆஸ்திரேலியா தொடரில் நெட் பவுலராகச் சென்று 3 வடிவங்களிலும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஆடிய பெருமையை நடராஜன் பெற்றுள்ளார்.

தொடரை வென்ற பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் நடராஜன். அவருக்கு இந்தியா திரும்பிய போது சேலத்தில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு பழனி சென்று மொட்டைப் போட்டுக் கொண்டார் நடராஜன்.

யார்க்கருக்குப் புகழ்பெற்ற இந்த நடராஜன் இதுவரை 1 டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டி ஒன்றில் ஆடி 2 விக்கெட்டுகளையும், டி20 சர்வதேசப் போட்டிகள் 3-ல் ஆடி 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார், சிறந்த பந்து வீச்சு 3/30.

சமீபத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டுத் தெரிவித்தார்

First published:

Tags: Cricketer natarajan, India Vs England, T natarajan