முகப்பு /செய்தி /விளையாட்டு / விருத்திமான் சகா, ரகானேவை டீமை விட்டுத் தூக்குங்கப்பா- ட்விட்டர்வாசிகள் கருத்து மழை

விருத்திமான் சகா, ரகானேவை டீமை விட்டுத் தூக்குங்கப்பா- ட்விட்டர்வாசிகள் கருத்து மழை

விருத்திமான் சகா

விருத்திமான் சகா

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விருத்திமான் சகா நியூசிலாந்துக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் 12 பந்தில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து இவரையும், ரகானேவையும் நீக்குமாறு டிவிட்டர்வாசிகள் கருத்து மழைப் பொழிந்துள்ளனர்.

ரிஷப் பண்ட் இல்லாததால் கே.எஸ். பரத் என்ற இளம் வீரருக்கு வாய்ப்பு அளிக்குமாறு பரிந்துரைக்கின்றனர் நெட்டிசன்கள். அதே போல் ‘பங்களிப்பு’ செய்யும் ரகானேவை தூக்கி விட வேண்டும், கோலி உள்ளே வந்த பிறகு ரகானே வெளியேற்றப்பட வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர். புஜாராவையும் அணியிலிருந்து நீக்க வேண்டும்.

விராட் கோலி கேப்டன்சியில் மாற்றியமைக்கப்பட்ட இந்திய அணி இவ்வாறு இருக்க வேண்டும்: ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட் என்று பேட்டிங் வரிசை இருந்தால் வலுவாக இருக்கும். ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் இருவருமே ஸ்பின் பந்தை வெளுத்துக் கட்டுகின்றனர், ஷுப்மன் கில் ஒரு சிறந்த பேக்ஃபுட் பிளேயர், ஷ்ரேயஸ் அய்யர் இரு கால் நகர்த்தலிலுமே சிறந்து விளங்குகிறார்.

நெட்டிசன்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்:

இந்தியா 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அபாரமாக ஆடி வருகின்றனர், அந்த அணி சற்றுமுன் வரை விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் எடுத்துள்ளது. வில் யங் 70 ரன்களுடனும் டாம் லேதம் 42 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

First published:

Tags: Ajinkya Rahane, Captain Virat Kohli, Wriddhiman Saha