இன்று ஜூன் 21, விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வெள்ளைச் சீருடையை இந்தியாவுக்காக அணிந்து 2011ம் ஆண்டு ஒருநாள் தான் ஆகிறது,அதாவது 2011ம் ஆண்டு நேற்றைய தினமான ஜூன் 20-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக கோலி அறிமுகமானார்.
இன்று இங்கிலாந்தில் இந்திய அணி விடுபட்ட தொடரை வெல்ல அங்கு சென்றுள்ளது, இந்த முறை சவால் அதிகம். விராட் கோலி 101 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ளார். 8000 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளார். 33 வயதான விராட் கோலி 8043 ரன்களை எடுத்துள்ளார் இப்போது சொதப்பலால் டெஸ்ட் சராசரி 50க்கும் கீழ் சற்றே இறங்கி 49.95 ஆக உள்ளது.அதிகபட்ச ஸ்கோர் 254 நாட் அவுட்.
தனது டெஸ்ட் அறிமுகத்தின் ஆண்டு நிறைவையொட்டி, கோஹ்லி தனது சாதனைகள் மற்றும் பல ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்த நினைவுகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். ‘காலம் பறக்கிறது’ என்று கோலி தனது ட்விட்டர் பதிவில் 11 வருட டெஸ்ட் கிரிக்கெட்டை நினைவு கூர்ந்தார்.
68 டெஸ்டில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த கோஹ்லி, அதில் 40ல் வெற்றி பெற்று 59 சதவீத வெற்றியை பதிவு செய்தார். இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியும் அடங்கும், அது இந்தியா ரன்னர்-அப் ஆனது. முதன் முதலில் சிட்னியில் இந்திய ஜாம்பவான் பேட்டர்கள் சொதப்பிய போது 76 ரன்களை எடுத்த கோலியை பெரிய ஆளாக வருவார் என்று இயன் சாப்பல் பாராட்டியது இன்றும் நினைவிருக்கிறது.
அதே போல் முதன் முதலில் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான் சதம் விளாசினார், இரு இன்னிங்ஸ்களிலும் சதமெடுத்த பெருமையையும் கோலி பெற்றார், மகா விரட்டலில் அந்த டெஸ்ட் போட்டியில் கோலி ஆட்டமிழந்தவுடன் இந்தியா குறைந்த இலக்கை தவற விட்டு தோற்றது.
இந்த வடிவத்தில் இந்தியாவுக்காக அவர் அடித்த 27 சதங்களில், நவம்பர் 2019 இல் பிங்க்-பால் டெஸ்டில் கோலி அடித்த முதல் சதமும் அடங்கும். ஆஸ்திரேலியாவில் ஒரே தொடரில் 4 சதங்கள், இங்கிலாந்தில் 2014-ல் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் சொதப்பினாலும் 2018-ல் 593 ரன்களை எடுத்து ஒருமுறை கூட ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் ஆட்டமிழக்காமல் வெற்றி வாகை சூடினார்.
ஒருநாள் போட்டிகளில் எத்தனை சேசிங், உண்மையில் பினிஷர்தான் இவர்தான் இவர் முதலில் இறங்கி கடைசி வரை நின்று வென்று கொடுப்பார், அதுபேர்தான் பினிஷிங், எல்லோரும் ஆடிக்கொடுத்த பின் கடைசியில் வந்து சிக்சர் அடித்து வெற்றி பெறுவது பினிஷிங் அல்ல. ஒரு பினிஷர் போட்டிய கடைசி ஓவர் வரை இழுக்காமல் முதலிலேயே வெல்வதுதான் ஆதிக்க வெற்றி. அந்த வகையில் விராட் கோலி உண்மையில் கிங் கோலிதான்.
பயங்கர பார்மில் இருந்து சச்சின் டெண்டுல்கர் 15,000 ரன்களை இவர்தான் உடைப்பார் எனும் நிலையில் பணிச்சுமை, பிரஷர், சர்ச்சை காரணமாக பார்ம் இறங்கி இப்போது அவர் மீண்டும் பார்முக்கு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார், ஜோ ரூட்டுக்கு முன்னால் சச்சின் டெண்டுல்கரை கோலி பிடிக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India Vs England, Joe Root, Virat Kohli