கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து பவுலர்!

Web Desk | news18-tamil
Updated: August 16, 2019, 7:13 PM IST
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து பவுலர்!
டிம் சவுதி
Web Desk | news18-tamil
Updated: August 16, 2019, 7:13 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டி சாதனையை நியூசிலாந்து பந்துவீச்சாளர் டிம் சவுதி சமன் செய்துள்ளார்.

நியூசிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து வீரர் டிம் சவுதி 19 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

முதல் இன்னிங்சில் டிம் சவுதி ஒரு சிக்ஸர் விளாசியதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் அடித்த சிக்ஸ்ர்களின் எண்ணிக்கையை சமன் செய்துள்ளார்.


சச்சின், 200 டெஸ்ட்கள் மற்றும் 329 இன்னிங்ஸ் மூலம் 69 சிக்ஸர்கள் அடித்தார். டிம் சவுதீ, 66 டெஸ்ட்களில் 96 இன்னிங்ஸ்களில் 69 சிக்ஸர்கள் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டிம் சவுதி 19வது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் நியூசிலாந்து வீரர் மெக்கலம் 107 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர்களில் சேவாக் 91 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

Also Watch

Loading...

First published: August 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...