ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டிம் பெய்ன், இவரது சகோதரி கணவன் இருவரும் சேர்ந்து ஒரே பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்

டிம் பெய்ன், இவரது சகோதரி கணவன் இருவரும் சேர்ந்து ஒரே பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்

டிம் பெய்ன்

டிம் பெய்ன்

 • Cricketnext
 • 2 minute read
 • Last Updated :

  தன் நிர்வாணப்படங்களை அனுப்பி, செக்ஸ் டார்ச்சர் கொடுத்த முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் விவகாரத்தில் இன்னொரு பரபரப்பாக,  இவரது சகோதரியின் கணவர் ஷனான் டப் என்பவரும் அதே பெண்ணுக்கு இதே போன்று செக்ஸ் டார்ச்சர் கொடுத்தது அம்பலமாகியுள்ளது.

  டிம் பெய்னின் சகோதரியை மணந்தவர்தான் டாஸ்மேனியா கிரிக்கெட் வீரர் ஷனான் டப். இவரை டாஸ்மேனியா கிரிக்கெட் கிளப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளது. காரணம் இருவரும் ஒரே பெண்ணிடம் தங்கள் காம லீலா விநோதங்களை நடத்திக் காட்டியதே.

  ஹெரால்ட் சன் ரிப்போர்ட்டை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலிய கிரிக்கெட் இணையதளம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், டிம் பெய்ன் செக்ஸ் டார்ச்சர் கொடுக்க மெசேஜ்கள், அரைநிர்வாண, முழு நிர்வாண படங்களை அனுப்பிய அதே பெண்ணிடம் தான் டப்பும் தப்பு செய்துள்ளார். டப் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வளர்ச்சிக்குழுவிலும் இருந்துள்ளார் டப்.

  டிம் பெய்ன் தாறுமாறாக செக்ஸ் மெசேஜ்களை டெக்ஸ்ட் செய்தது குறித்த அதே 2018-ம் ஆண்டு காலக்கட்டத்தில்தான் டப் மெசேஜ்களும் அதே பெண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆஷஸ் தொடர் தொடங்க இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் டிம் பெய்ன் தன் கேப்டன்சியை ராஜினாமா செய்துள்ளார், இவர் அணியில் இருந்து நீக்கப்படுவாரா என்பது போகப்போக தெரியும்.

  ஷனான் டப்

  ஏனெனில் இவரை அணியில் வைத்திருந்தால் நிச்சயம் எதிரணியினரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவதோடு, பார்வையாளர்களின் கடும் கோபத்துக்கும் ஆளாக நேரிடும் என்பதால் டிம் பெய்ன் கரியர் அவ்வளவுதான் என்று தெரிகிறது.

  இதனையடுத்து 65 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கேப்டனாகும் வாய்ப்பை பாட் கமின்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தகக்து.

  ஹெரால்ட் சன் செய்திகளின் படி 2017 பிரிஸ்பன் டெஸ்ட்டின் போது பரிமாறப்பட்ட டெக்ஸ்ட் மெசேஜ்கள் ஆகும். மெசேஜ்கள் மிகவும் ஆபாசமென்பதால் பப்ளிஷ் செய்ய தகுதியற்றவை என்கிற்து ஹெரால்ட் சன். ஆனால் ஒரு பெண்ணிடம் மிக மோசமாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. அதாவது தன் நிர்வாணப்புகைப்படத்தை அனுப்பியுள்ளார் டிம் பெய்ன், இதோடு தன் ஆணுறுப்பை மட்டும் படம் பிடித்து அனுப்பியதாகவும் ஹெரால்ட் சன் கூறுகிறது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Sexting, Sexual abuse, Tim Paine