என்ன தைரியம் உனக்கு... சச்சினை வீழ்த்தியதால் வந்த கொலை மிரட்டல்கள் குறித்து இங்கிலாந்து பவுலர் ஓபன் டாக்

சச்சின் டெண்டுல்கர் 100-வது அடிக்க வேண்டிய தருணத்தில் அவரை விக்கெட்டை வீழ்த்தியதால் தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக இங்கிலாந்து பவுலர் டிம் பிரெஸ்னன் தெரிவித்துள்ளார்.

என்ன தைரியம் உனக்கு... சச்சினை வீழ்த்தியதால் வந்த கொலை மிரட்டல்கள் குறித்து இங்கிலாந்து பவுலர் ஓபன் டாக்
  • Share this:
சச்சினை அவுட்டாக்கிய பின்பு தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக நினைவுகூர்ந்துள்ளார் இங்கிலாந்து பவுலர் டி.எம் பிரெஸ்னன் 

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகளை தன்வசம் வைத்திருப்பவர் சச்சின். கிரிக்கெட் வரலாற்றில் சதத்தில் சதம் கண்ட ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர். 2012-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தனது 100-வது சதத்தை சச்சின் டெண்டுல்கர் பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்தார்.

2011-ம் ஆண்டு சச்சின் 99-வது சதத்தை பதிவு செய்தாலும் நீண்ட போட்டிகளுக்கு பின்னரே 100-வது சதத்தை பதிவு செய்தார். இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது சச்சின் 90 ரன்களை கடந்து விளையாடினார். இந்த போட்டியில் சச்சின் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.


ஆனால் 91 ரன்கள் எடுத்திருந்த போதுடிம் பிரெஸ்னன் வீசிய பந்தில் எல்.பி.டபுள்.யு முறையில் வெளியேற்றப்பட்டார். ஆனால் பந்து காலில் படவில்லை என்று அப்போது சர்ச்சை எழுந்தது. நடுவர் ராட் டக்கெர் தான் அவுட் வழங்கினார்.

இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து பவுலர் டிம் பிரெஸ்னன் நினைவு கூர்ந்துள்ளார். அதில், 2011-ம் சச்சினை அவுட் செய்த பின்னர் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தன. உங்களுக்கு என்ன தைரியம் இருந்தால் சச்சின் விக்கெட்டை வீழ்த்தி இருப்பீர்கள் என்று எல்லாம் பேசினார்கள்.

சச்சினுக்கு அவுட் கொடுத்த ராட் டக்கெருக்கும் இதுப்போன்ற கொலை மிரட்டல் வந்துள்ளது. நாங்கள் இருவரும் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தோம்“ என்று தெரிவித்துள்ளார்.





First published: June 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading