நியூசிலாந்து அணிக்கு சூப்பர் ஓவர் தான் ராசியில்லை என்று பார்த்தால் வர்ணனையாளரும் ராசியில்லாமல் இருக்கும் சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவிற்கு எதிரான 3-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி சூப்பர் ஓவரில் தோல்வியடைந்தது. வெற்றிக்கு மிக அருகாமையில் வந்தும் கடைசி தருணத்தில் நியூசிலாந்து வெற்றி வாய்ப்பை தவறவிட்டது. உலகக் கோப்பை இறுதி போட்டி சூப்பர் ஓவருக்கு பின் மிக மோசமான சூப்பர் ஓவர் போட்டியை நியூசிலாந்து எதிர் கொண்டுள்ளது.
நியூசிலாந்து கடந்த 7 மாதங்களில் 3 சூப்பர் ஓவரை எதிர் கொண்டது. 3 சூப்பர் ஓவரிலும் நியூசிலாந்து அணிக்கு தோல்வியே கிடைத்துள்ளது. உலகக் கோப்பை இறுதி போட்டியில் யாரும் எதிர்பாராதவகையில் சூப்பர் ஓவரும் டிராவில் முடிவடைய பவுண்டரிகளின் எண்ணிக்கையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
2019 நவம்பரில் ஆக்லாந்து மைதானத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே சூப்பர் ஓவர் நடைபெற்றது. அதிலும் நியூசிலாந்து தோல்வியை சந்தித்தது. அதை தொடர்ந்து ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான போட்டியிலும் நியூசிலாந்து தோல்வியை தழுவியது.
மேலும் நியூசிலாந்து விளையாடிய இந்த 3 போட்டியிலும் கமெண்டரி பாக்ஸில் வர்ணனையாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஐயன் ஸ்மித் இருந்துள்ளார். சூப்பர் ஓவர் கமெண்டரி பாக்ஸில் இருந்து அவர் தான் தொகுத்து வழங்கி உள்ளார். இந்தியா - நியூசிலாந்து போட்டி சூப்பர் ஓவரும் டிராவில் முடிவடைந்தால் வர்ணனையாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவேன் என்று அவர் கூறியிருந்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.