3 இலங்கை வீரர்களுக்குத் தடை: வெளியே சுற்றித் திரிந்ததைக் காட்டிக் கொடுத்த வீடியோ

கொரோனா விதிமீறல் 3 இலங்கை வீரர்கள் நீக்கம்.

இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணியின் 3 வீரர்கள், டிக்வெல்லா, குசல் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகியோர் கொரோனா பாதுகாப்பு வளையத்தை மீறி வெளியே சென்றதால் தடை செய்யப்பட்டனர், இவர்கள் இலங்கை திரும்புகின்றனர்.

  • Share this:
    இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணியின் 3 வீரர்கள், டிக்வெல்லா, குசல் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகியோர் கொரோனா பாதுகாப்பு வளையத்தை மீறி வெளியே சென்றதால் தடை செய்யப்பட்டனர், இவர்கள் இலங்கை திரும்புகின்றனர்.

    குசால் பெரேரா தலைமை இலங்கை டி20 அணி இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரில் 3-0 என்று ஒயிட்வாஷ் உதை வாங்கியது. இந்நிலையில் இந்த மூன்று வீரர்களின் இந்தச் செயலினால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஒரு நாள் தொடரில் பின்னடைவு ஏற்பட்டது.

    இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் இந்த மூன்று வீரர்களும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மூவரும் வெளியில் சுற்றித் திரிந்ததை ஒப்புக் கொண்டனர்.



    இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. டிக்வெல்லா, மெண்டிஸ் பொது இடத்தில் உட்கார்ந்தது வீடியோவில் அம்பலமானது. குணதிலகா வீடியோவில் இல்லாவிட்டாலும் இவரும் சுற்றியது தெரியவந்தது. அவரே ஒப்புக் கொண்டார்.

    துர்ஹாம் சிட்டி செண்டருக்குப் போகக்கூடாது என்று குறிப்பிட்ட விதிமுறை உள்ளது, ஆனால் இவர்கள் மூவரும் அங்குதான் சென்றுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இங்கிலாந்து-இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 டி20 போட்டிகளில் ஐசிசி மேட்ச் ரெஃப்ரீயாகப் பணியாற்றிய பில் விட்டிகேஸ் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இவர் மற்றும் இவருடன் இருந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    ஆகவே கொரோனா ஆபத்து இன்னமும் முழுமையாக விலகாத நிலையில் இலங்கை வீரர்கள் துர்ஹாம் சிட்டி செண்டருக்கு போனது இலங்கைக்கு பெரிய தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்த 3 வீரர்களுக்கான மாற்று வீரர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர்.
    Published by:Muthukumar
    First published: