பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு கொரோனா தொற்று

கொரோனா உறுதி செய்யப்பட்ட வீரர்கள் (கோப்புப்படம்)

நாளை இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு புறப்பட இருந்த பாகிஸ்தான் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

 • News18
 • Last Updated :
 • Share this:
  கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக உலக அளவில் எந்த விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படவில்லை. கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எனினும், சில நாடுகளில் பார்வையாளர்கள் இன்றி உள்ளூர் போட்டிகள் நடத்தப்பட்டன.

  இதனை அடுத்து, சர்வதேச போட்டிகளையும் பார்வையாளர்கள் இன்றி நடத்த ஐசிசி முடிவு செய்தது. அதன்படி, ஏற்கனவே திட்டமிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட இங்கிலாந்து - பாகிஸ்தான் போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. மூன்று டெஸ்ட், மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடருக்காக, பாகிஸ்தான் அணி நாளை இங்கிலாந்து புறப்பட உள்ளது.
  படிக்கஉடுமலை சங்கர் கொலை வழக்கு : கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன?

  படிக்கபேருந்தில் பயணித்த கணவன் - மனைவிக்கு கொரோனா... பயணிகள், ஓட்டுநர், நடத்துனர் பாதி வழியில் இறங்கியதால் பதற்றம்
  வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்ற நிலையில், அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், ஷாதப் கான், ஹைதர் அலி, ஹரிஷ் ராஃப் ஆகிய மூன்று வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

  மூன்று வீரர்களுக்கும் அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன், சுய தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Sankar
  First published: