• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 4-வது டெஸ்ட்: இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்?- லெவன் என்ன?

4-வது டெஸ்ட்: இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்?- லெவன் என்ன?

இந்திய அணி.

இந்திய அணி.

நாளை, செப்டம்பர் 2ம் தேதி வியாழக்கிழமை ஓவல் மைதானத்தில் தொடங்கும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் நிகழ்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
    நாளை, செப்டம்பர் 2ம் தேதி வியாழக்கிழமை ஓவல் மைதானத்தில் தொடங்கும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் நிகழ்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பேட்ஸ்மென்கள் புதிய பந்தில் வரிசையாக ஆட்டமிழந்து வருகின்றனர், இன்னொரு பேட்ஸ்மெனுக்கு கால்காப்பு கட்டக் கூட நேரமில்லாமல் கொத்தாகச் சரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஓவல் டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா, ஜடேஜா, ரகானே நீக்கப்பட்டு, இவர்களுக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் அல்லது உமேஷ் யதவ், அஸ்வின், ஹனுமா விகாரியை அணியில் கொண்டு வரலாம் என்று தெரிகிறது. அல்லது ரிஷப் பந்த்திற்கு ஓய்வு அளித்து விட்டு ராகுல் கீப் செய்து மயங்க் அகர்வால் அல்லது பிரிதிவி ஷா யாரையாவது அணியில் சேர்க்கவும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

    இந்திய அணியில் மாற்றம் உண்டா என்று விராட் கோலியிடம் கேட்ட போது, “அது நடந்தே தீரும். அதுதான் தர்க்கபூர்வமானது, அர்த்தபூர்வமானது” என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

    பல முன்னாள் வீரர்களும் ரகானேயை தூக்கி விட்டு சூரியகுமார் யாதவ்வுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதே போல் ஜடேஜா போதும், அஸ்வினைக் கொண்டு வரவும் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அஸ்வினை ஹெடிங்லேயில் உட்கார வைத்தது அநியாயம், அவர் இருந்த் ஜோ ரூட்டை குறைந்த ஸ்கோரில் வீட்டுக்கு அனுப்பியிருந்தால் நிச்சயம் ஆட்டம் இவ்வளவு கேவலமாக போயிருக்காது. விகாரியை சேர்ப்பது மூலம் கூடுதலாக ஒருபவுலரும் கிடைப்பார்.

    பவுலிங்கில் இஷாந்த் சர்மா வேறு ஏதோ உலகத்தில் இருப்பது போல் வீசுகிறார், பாவம் பவுலிங் ஆக்‌ஷம் மாறிவிட்டது, காயமடைய வேண்டாம் என்று வீசுவது போல் தெரிகிறது, இதனால் வலது கை சைடு ஆன் ஆகி, முன் கால் கிரீசுக்கு அருகே மடங்குகிறது, இதனால் வேகம் குறைவதோடு ஸ்விங், பவுன்ஸ் இருக்காது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எனவே ஷர்துல் தாக்கூர் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி உத்தேசமாக இப்படி இருக்கலாம்: ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், புஜாரா, கோலி, ஹனுமா விகாரி / சூரியகுமார், ரிஷப் பந்த், அஸ்வின், பும்ரா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாக்கூர்/உமேஷ் யாதவ்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: