• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இலங்கை கிரிக்கெட் வீரரை சீண்டிய மலிங்காவின் மனைவி!

இலங்கை கிரிக்கெட் வீரரை சீண்டிய மலிங்காவின் மனைவி!

பெரேரா,  மலிங்காவுடன் அவரது மனைவி.

பெரேரா, மலிங்காவுடன் அவரது மனைவி.

#ThisaraPerera has written Letter to #SriLankaCricket | ஆல்ரவுண்டர் திசரா பெரேரா இலங்கை டி-20 போட்டி அணிக்கும் கேப்டனாக செயல்பட்டவர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இலங்கை கிரிக்கெட் வீரர் திசரா பெரேரா குறித்து மலிங்காவின் மனைவி பேஸ்புக் பக்கத்தில் அவதூறாக பதிவிட்ட சம்பவம் அந்நாட்டு கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் லசித் மலிங்கா. 35 வயதான மலிங்கா, கடந்த ஓராண்டாக அணியில் இருந்து ஓரங்கப்பட்டு இருந்தார். அவர் விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் அணிக்கு திரும்பினார்.

    Lasith Malinga, மலிங்கா
    இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் மலிங்கா.


    அத்துடன், குறுகிய காலத்தில் மலிங்காவுக்கு ஒரு நாள் மற்றும் டி-20 போட்டி அணிக்கான கேப்டன் பதவியும் கிடைத்தது. அவருக்கு முன்பாக தினேஷ் சண்டிமால் ஒரு நாள் அணிக்கும், ஆல்ரவுண்டர் திசரா பெரேரா டி-20 போட்டி அணிக்கும் கேப்டனாக செயல்பட்டனர்.

    இந்நிலையில், திசரா பெரேரா மீது கேப்டன் மலிங்காவின் மனைவி தன்யா பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது பேஸ்புக் பக்கத்தில், “நாட்டின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சரை திசரா பெரேரா சந்தித்து, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணியில் தனது இடத்தை உறுதி செய்ய முயற்சிக்கிறார்” என்று கூறியிருந்தார்.

    Thisara Perera, திசரா பெரேரா
    திசரா பெரேரா. (AFP)


    இதனை அடுத்து திசரா பெரேரா, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஆஷ்லே டி சில்வாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “கேப்டன் பதவியில் இருப்பவரின் மனைவி இதுபோன்று பொதுவெளியில் குற்றம்சாட்டுவது மக்களிடம் என்னை பற்றி தவறான எண்ணத்தை உருவாக்கிவிடும். இது தனிப்பட்ட நபரின் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கிறது. உடனே கிரிக்கெட் வாரியம் தலையிட்டு இந்த பிரச்னையை சரி செய்ய வேண்டும்” என கூறியிருந்தார்.

    இளைஞர்களின் செல்போன்களை ஆக்கிரமிக்கும் க்யூட் ஸ்மிருதி மந்தனா!

    Also Watch...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: