ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ரிஷப் பந்த்திற்கு மாற்று வீரர் இவர்தான்… அதிரடி பேட்ஸ்மேனை கைகாட்டும் அசாருதீன்

ரிஷப் பந்த்திற்கு மாற்று வீரர் இவர்தான்… அதிரடி பேட்ஸ்மேனை கைகாட்டும் அசாருதீன்

ரிஷப் பந்த்

ரிஷப் பந்த்

உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும், ரிஷப் பந்த் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றுதான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பந்திற்கு மாற்று வீரர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், அதிரடி பேட்ஸ்மேன் ஒருவரை முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கை காட்டியுள்ளார். இது தொடர்பான அவருடைய கருத்து வரவேற்பை பெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக இருந்தவர் ரிஷப் பந்த். இவர் கடந்த மாதம் 30ஆம் தேதி உத்தரகண்டில் நடந்த கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். ரிஷப் பந்திற்கு தற்போது மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு 3 ஆபரேஷன்கள் செய்ய வேண்டிய நிலையில், முதல் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஐந்து வாரங்களில் அடுத்த அறுவை சிகிச்சை நடைபெறும். இதன் பின்னர் சில மாதங்களுக்கு அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால், அடுத்து வரக்கூடிய தொடர்களில் ரிஷப் பந்த்திற்கு பதிலாக எந்த வீரர் சரியான நபராக இருப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போதைய சூழலில் ரிஷப் பந்த் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும், அவர் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றுதான் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ரிஷப் பந்த்திற்கு பதிலாக இஷான் கிஷன் மிகச்சிறந்த மாற்று வீரராக இந்திய அணியில் செயல்படுவார் என்று, முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கூறியுள்ளார். ரிஷப் பந்தை போலவே இஷான் கிஷனும் இடதுகை பேட்ஸ்மேன் என்பதால், அவருக்கு அட்வான்டேஜ் அதிகமாக இருக்கும் என்று அசாருதீன் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று சூர்ய குமார் யாதவை பாராட்டிய அவர், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து ஃபார்மேட்களிலும் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக அவர் இருப்பார் என்று அசாருதீன் பாராட்டு தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இஷான் கிஷன் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Cricket