Home /News /sports /

ரவி சாஸ்திரி அறிவார்த்தமாகப் பேசுவதில்லை, ஏதோ உள்நோக்கத்துடன் கோலியை சப்போர்ட் செய்கிறார்- சஞ்சய் மஞ்சுரேக்கர் காட்டம்

ரவி சாஸ்திரி அறிவார்த்தமாகப் பேசுவதில்லை, ஏதோ உள்நோக்கத்துடன் கோலியை சப்போர்ட் செய்கிறார்- சஞ்சய் மஞ்சுரேக்கர் காட்டம்

சஞ்சய் மஞ்சுரேக்கர்

சஞ்சய் மஞ்சுரேக்கர்

விராட் கோலி குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய கருத்துக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் உடன்பாடு தெரிவித்துள்ளார். மேலும் ஓரிரு ஆண்டுகள் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்திருக்கலாம் என்ற கருத்துடன் ஒத்துப் போகிறேன், ஆனால் விராட் கோலி தொடர்ந்து வெற்றிகள் பெறுவதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்ற ரவி சாஸ்திரியின் கருத்து மோசமானது அதனை விமர்சிக்கிறேன் என்கிறார்.

மேலும் படிக்கவும் ...

    CNN-News18 உடன் பேசிய மஞ்ச்ரேக்கர் கூறும்போது, “நான் ரவி சாஸ்திரியின் மிகப்பெரிய ரசிகனாக இருந்தேன். நான் அவருக்கு கீழ் விளையாடினேன், அவர் வீரர்களுக்கு ஆதரவளித்தார், சிறந்த போராளி, மூத்தவர். ஆனால் இப்போதுள்ள சாஸ்திரி 2.0 எனக்கு புரியவில்லை. பொதுவெளியில் அவர் இப்படி பேசுவார் என்று எதிர்பாராத ஒன்று. நான் அதற்கு எதிர்வினையாற்றவில்லை. நான் அவமரியாதையாக இருக்க விரும்பவில்லை. அவர் அறிவார்த்தமான கருத்துக்களை வெளியிடுவதில்லை, அதன் பின்னால் உள்ள திட்டம், உள்நோக்கம் ஆகியவற்றை நீங்கள் பார்க்கலாம். . இது துல்லியமான கிரிக்கெட் கருத்து அல்ல.

    “மூன்று வடிவங்களுக்கும் தகுதியான ஒரே கேப்டன் வீரர் ரோஹித் சர்மா மட்டுமே. டி20யில் அவர் மிகவும் நன்றாக இருக்கிறார். ஐபிஎல்லில் இயல்பாக பார்த்திருக்கிறோம். ஒரு நாள் போட்டிகளில், அவர் கேப்டனாக இருந்துள்ளார், மேலும் டெஸ்ட் போட்டிகளிலும், இங்கிலாந்தில் நன்றாக ஆடிய பிறகு, கேப்டன்சிக்கு மிகவும் தகுதியானவர் ரோகித் சர்மாதான். அதிக நாட்கள் பார்க்க வேண்டாம். ஒரு வருடம் பார்ப்போம் அவர் கேப்டன்சி எப்படி இருக்கிறது என்று. இவரை விட்டால் இப்போதைக்கு ஆளில்லை. மற்ற யாரைத் தேர்வு செய்தாலும் அதைச் சுற்றி நிறைய சிக்கல்கள் உள்ளன.

    எனவே ஒரு வருடத்திற்கு ஒருமுறை கேப்டன்சி திறன்களை பரிசீலனை செய்து ஏதேனும் சிக்கல் இருந்தால், நீங்கள் மற்றொரு தலைவரைப் பார்க்கத் தொடங்குங்கள். தற்சமயம் வேறு சிறந்த தெரிவுகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை எனவே ஓரிரு வருடங்கள் கழித்து நீங்கள் யாரையாவது கேப்டனாகக் கண்டுபிடிக்கலாம்.” என்றார் மஞ்ச்ரேக்கர்.

    ரவி சாஸ்திரி முன்னதாகக் கூறிய போது, “கோலி இன்னும் 2 ஆண்டுகள் கேப்டன்சி செய்திருக்கலாம், அடுத்ததாக நிறைய உள்நாட்டு தொடர்கள்தான் இருக்கின்றன, அவர் கேப்டன்சியின் கீழ் வெற்றிக்கணக்கு 50-60 என்று இருக்கும் இது பலருக்குப் பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை” என்றார், இந்தக் கருத்தைத்தான் அறிவுபூர்வமானதாக இல்லை, திட்டம் போட்டு ஏதோ உள்நோக்கத்துடன் பேசுவதாகத் தெரிகிறது என்கிறார் மஞ்ச்ரேக்கர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ravi Shastri, Rohit sharma, Virat Kohli

    அடுத்த செய்தி