• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்தியாவுக்கு கிரிக்கெட் வந்தது எப்போது? சுதந்திரத்துக்குப் பிறகு எந்த அணியுடன் முதன்முதலாக மோதியது?

இந்தியாவுக்கு கிரிக்கெட் வந்தது எப்போது? சுதந்திரத்துக்குப் பிறகு எந்த அணியுடன் முதன்முதலாக மோதியது?

கிரிக்கெட்

கிரிக்கெட்

வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, லெப்டினன்ட் கிளெமென்ட் டவுன்ங், காம்பேயில் கிரிக்கெட் விளையாடியது முதல் உதாரணம் என தெரிவித்துள்ளனர்.

  • Share this:
மற்ற நாடுகளில், பல விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட் இருக்கலாம். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட் என்பது ஒரு தனி மதத்துக்கு ஒப்பானது. சாதி, மத பேதங்களைக் கடந்து அனைவரையும் ஒரு புள்ளியில் இணைக்கும் சக்தி, இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு விளையாட்டுக்கு இருக்கிறது என்று கூறினால் அது கிரிக்கெட் என தைரியமாக கூறலாம்.

இந்தளவுக்கு இந்தியாவில் பிரபலமாக இருக்கும் கிரிக்கெட், எப்படி இந்தியாவுக்குள் வந்தது? எப்போது சர்வதேச எல்லைகளைக் கடந்து இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்தது? என்ற கேள்வி ஒரு சிலருக்கு இருக்கலாம். இதற்கான பதில் 18 ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 18 ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவிற்குள் கிரிக்கெட் வந்துவிட்டது தெரியவந்துள்ளது. முதன்முதலாக குஜராத் மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமான காம்பேயில் கிரிக்கெட் விளையாடப்பட்டிருக்கிறது.

வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, லெப்டினன்ட் கிளெமென்ட் டவுன்ங், காம்பேயில் கிரிக்கெட் விளையாடியது, முதன்முதலாக இந்தியாவில் கிரிக்கெட் விளையாடியதற்கான முதல் உதாரணம் என தெரிவித்துள்ளனர். 1737 ஆம் ஆண்டு டவுனிங் எழுதி வெளியிட்ட A Compendious History of Indian Wars புத்தகத்தில் மாலுமிகள் கிரிக்கெட் விளையாடியதற்கான குறிப்புகள் உள்ளன. அந்தக் குறிப்பில், மாலுமிகள் கிரிக்கெட் விளையாடியபோது, அங்கு கூலிகளாக இருந்தவர்கள் அவர்கள் விளையாடியதை ரசித்து பார்த்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read : இந்தியாவுடனான T20 போட்டி குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரிய பாகிஸ்தான் வீரர்!

கிழக்கிந்திய கம்பெனியின் கடற்படை உறுப்பினர்கள் குஜராத் மாநிலம் காம்பேயில் தங்கியிருந்துள்ளனர். அப்போது கிடைத்த ஓய்வு நேரத்தில் டவுனிங் உள்ளிட்டோர் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அங்கு இருந்த கூலி வேலை செய்து கொண்டிருந்த மக்கள் அவர்கள் விளையாடியதை ரசித்து பார்த்துள்ளனர். இதனையே தன்னுடைய புத்தகத்தில் டவுனிங் எழுதியுள்ளார்.

அதன்பிறகு சுமார் இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் கிரிக்கெட் விளையாட்டப்பட்டதற்கான ஆவணங்கள் உள்ளன. 1932 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தேசிய அணி முதல் டெஸ்ட் போட்டியை விளையாடியது. அதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த ரஞ்சித்சின்ஜி மற்றும் கே.எஸ் துலீப்சின்ஜி போன்ற பல வீரர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாடியுள்ளனர். ரஞ்சித்சின்ஜி இங்கிலாந்து அணிக்காக விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே அரைசதம் மற்றும் சதம் விளாசி சாதனை படைத்தார். ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ஆசஸ் வரலாற்று தொடரில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இந்திய அணியைப் பொறுத்தவரை டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 6-வது அணி. சி.கே நாயுடு தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியை விளையாடியது. சுதந்திரத்துக்குப் பிறகு, அதாவது 1948 ஆம் ஆண்டு முதன் முதலாக சுதந்திர இந்திய அணியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியது. அந்த அணிக்கு லாலா அமர்நாத் தலைமை தாங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: