ரிஷப் பந்த்-னா பயம்; இனி கிரிக்கெட் ஆட வேண்டாம் என்ற முடிவுக்கே வந்து விட்டேன்: மனம் திறக்கும் ஜாக் லீச்

ரிஷப் பந்த்-னா பயம்; இனி கிரிக்கெட் ஆட வேண்டாம் என்ற முடிவுக்கே வந்து விட்டேன்: மனம் திறக்கும் ஜாக் லீச்

ஜாக் லீச், ரிஷப் பந்த்.

இந்தியாவில் இது என் முதல் கிரிக்கெட் தொடர். ஆனால் இப்படிப் போட்டு பின்னி எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

 • Share this:
  சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த்தின் காட்டடியில் சிக்கிய ஜாக் லீச், கிரிக்கெட் ஆடலாமா இல்லை விட்டு விடலாமா என்ற முடிவுக்கே வந்து விட்டென் என்று தெரிவித்துள்ளார்.

  578 ரன்கள் எடுத்த இங்கிலாந்து பிறகு இந்திய அணியை 73/4 என்று சரித்தது, அப்போது களம் புகுந்தார் ரிஷப் பந்த், வெங்கலக் கடையில் யானை புகுந்தது போல் என்று கூறுவார்களே அது போல் ஒரே சத்தம், காட்டடி. சிக்சர் மழை, அதுவும் ஒரே பவுலரை, அதுதான் ஜாக் லீச்.

  நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, கோலி, ரஹானே பெவிலியனுக்குத் திரும்பிய நிலையில் ரிஷப் பந்த், சிட்னி, பிரிஸ்பன் ஹீராயிஸத்தை தொடர்ந்து காட்டினார். பார்க்க ஜாடையில் சற்றே நேதன் லயன் போல் இருந்ததாலோ என்னவோ வலது கை இடது கை பாரபட்சமில்லாமல் ரிஷப் பந்த் மேலேறி வந்து இங்கிலாந்து இடது கை பவுலர் ஜாக் லீச்சை 5 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் விளாசினார்.

  ஒரு கட்டத்தில் ஜாக் லீச்சின் பந்து வீச்சு 8 ஓவர்கள் 80 ரன்கள் என்பதாக இருந்தது. இந்த அடியைப் பார்த்து ‘ரிஷப் பந்த்-னா பயம்’ என்று வேதநாயகம்னா பயம் என்ற சலீம் கோஸ் பாணியில் ஜாக் லீச் காதில் ஒலிக்கிறது போலும், இனி கிரிக்கெட்டே ஆட வேண்டாம் என்று கருதியதாகத் தெரிவித்தார் ஜாக் லீச்.

  இந்நிலையில் அவர் கூறியதாவது:

  இந்தியாவில் இது என் முதல் கிரிக்கெட் தொடர். ஆனால் இப்படிப் போட்டு பின்னி எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மிகக்கடினம். ஆனால் டெஸ்ட்டை வென்றா போது அனைத்து வகையான உணர்வுகளுக்கும் ஆட்பட்டோம். அதனால்தான் கிரிக்கெட்டை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம்.

  3ம் நாளில் 8 ஓவர்களில் 77 ரன்களை விட்டுக் கொடுத்த போது இனி கிரிக்கெட்டை ஆடுவேனா என்பதில் நான் உறுதியாக இல்லை. ஆனால் அதன் பிறகு மீண்டெழுந்து அணியின் வெற்றிக்குப் பங்களிப்பு செய்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

  227 ரன்களில் வெற்றி பெற்றாலும் இவ்வளவு கடினமாக இருக்கும் என்று யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள். 4ம் நாள் மாலை ரோஹித் சர்மாவை வீழ்த்திய பந்து இந்தத் தொடரின் மீதிப் போட்டிகளுக்கான என் காட்சிப்பதிவு உதவி என்றுதான் கூறுவேன். முதல் நாள் ரோஹித்தை வீழ்த்தியதால் மறுநாள் 10 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று பெருமூச்சு விட வேண்டிய தேவையில்லாமல் போய் விட்டது.
  Published by:Muthukumar
  First published: