அனுபவமற்ற வீரர்களுடன் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதன் மண்ணிலேயே தண்ணி காட்டும் இந்திய அணி - அக்தர் புகழாரம்!

நீங்கள் (இந்தியா) கடைசி டெஸ்டில் ஆடுகிறீர்கள், உங்களிடம் வீரர்கள் இல்லை, இருந்தாலும் போராடுகிறீர்கள். இந்த குணத்தை பற்றி தான் நான் குறிப்பிடுகிறேன்,

நீங்கள் (இந்தியா) கடைசி டெஸ்டில் ஆடுகிறீர்கள், உங்களிடம் வீரர்கள் இல்லை, இருந்தாலும் போராடுகிறீர்கள். இந்த குணத்தை பற்றி தான் நான் குறிப்பிடுகிறேன்,

  • Share this:
அறிமுக மற்றும் அனுபவமற்ற வீரர்களை வைத்துக்கொண்டே, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை இந்திய அணி போராடுகிறதென்றால் வரலாற்றிலேயே இது தான் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் சீரிஸ் ஆக இருக்க முடியும் என சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின் முடிவு எப்படி இருந்தாலும் காயங்களால் வீரர்கள் பலர் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் இந்திய அணி தோல்விப்பாதையில் இருந்து மீண்டு வந்த விதம் பெருமையளிக்கும் விதமாக அமைந்திருப்பதாக ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என அழைக்கப்படும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.



சோயிப் அக்தர் தனது யூடிபூக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் குறித்து பேசியுள்ளார். அதில்,  "இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் காயத்தில் சிக்கியிருக்கின்றனர், ஆனால் அதில் தான் அழகு அடங்கியிருக்கிறது, இந்திய அணி சிறுவர்களுடன் ( அறிமுக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோரை குறிப்பிடுகிறார்) ஆடி வருகிறது. ஆனால் இவர்கள் இது போன்ற ஒரு சூழலில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடுவோம் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். முழுமையான திறனுடன் களமிறங்கியிருக்கும் ஆஸி அணியின் தாக்குதலை பல சரிவுகளுக்கு மத்தியிலும், இந்திய அணி எதிர்கொண்டு வருகிறது.

முழு திறனுடன் கூடிய ஆஸ்திரேலிய அணியைக் காட்டிலும் அரையளவே திறன் பெற்றிருக்கும் இந்திய அணி மேலானது என நான் நம்புகிறேன்.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 36 ரன்களுக்குள் சுருண்டு வரலாற்று தோல்வி பெற்ற அவமானத்தில் இருந்து மீண்டு, இந்திய அணி மெல்போர்னில் நடைபெற்ற 2வது டெஸ்டில் வெற்றி வெற்ற விதம், சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்டில் அஸ்வினும், விஹாரியும் 50 ஓவர்களுக்கு மேல், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக களத்தில் நின்று அந்த டெஸ்டை ட்ரா செய்தது ஜாம்பவான்களே உரித்தானது."



பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் டெஸ்டை ட்ரா செய்தால் இந்த பார்டர் - கவாஸ்கர் தொடர் தான் இந்தியாவின் எப்போதும் சிறந்த டெஸ்ட் தொடராக அமையும் என சோயிப் அக்தர் கூறினார்.

"இத்தனை பேருக்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில், ரோகித் சர்மா, அஜிங்கியா ரகானேவை தவிர்த்து பெரிய வீரர்கள் இல்லை என்ற சூழலில், அனுபவமற்ற வீரர்களை கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை சோதித்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை.

நீங்கள் (இந்தியா) கடைசி டெஸ்டில் ஆடுகிறீர்கள், உங்களிடம் வீரர்கள் இல்லை, இருந்தாலும் போராடுகிறீர்கள். இந்த குணத்தை பற்றி தான் நான் குறிப்பிடுகிறேன், இதனை பி-டீம் என்று அழைக்க மாட்டேன்.

இந்த சூழலில் இந்த டெஸ்ட்டை மட்டும் இந்திய அணி கெட்டியாக பிடித்து விட்டால், வெற்றி கூட தேவையில்லை, ட்ரா செய்தாலே போதும் நிச்சயம் இது தான் இந்திய அணியின் வரலாற்றில் சிறந்த டெஸ்ட் தொடராக இருக்கும் ” என சோயிப் அக்தர் கூறினார்.
Published by:Arun
First published: