தோனியை கொண்டாடிய இந்திய மக்கள்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று முக்கியமான நாள்...!

2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி ஒரு முறை கூட வென்றதில்லை. அடுத்த டி20 உலககோப்பை தொடர் 2020-ம் ஆண்டு நடைபெற உள்ளது.

தோனியை கொண்டாடிய இந்திய மக்கள்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று முக்கியமான நாள்...!
இந்திய அணி
  • News18
  • Last Updated: September 24, 2019, 10:39 AM IST
  • Share this:
இந்திய அணி 12 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி டி-20 உலகக்கோப்பையை வென்றது.

டி20 உலககோப்பை தொடர் முதன் முறையாக கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்றது. ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, கென்யா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாவே உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்ட டி-20 தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது.

லீக் சுற்று போட்டிகளில் வெற்றி பெற்று நியூசிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிபோட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.


இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி ஜோஹன்ஸ்பர்க்கில் உள்ள வாண்டெரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தோனி தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக கவுதம் காம்பீர் 54 பந்துகளில் 75 ரன்களை அடித்தார்.

158 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் வெற்றி பெற 13 ரன்கள் இருந்த போது அந்த ஓவரை ஜொஹிந்தர் சர்மா வீசினார். ஏற்கெனவே 9 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்திருந்த நிலையில் முதல் 2 பந்துகளில் 7 ரன்கள் அடிக்கப்பட்டது. கடைசி 4 பந்துகளில் 6 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்த போது ஸ்ரீசாந்திடம் கேட்ச் கொடுத்து மிஸ்பா அவுட்டானர்.

இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் டி20 உலகக்கோப்பையை கைப்பெற்றியது. 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இர்பான் பதான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Loading...
2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி ஒரு முறை கூட வென்றதில்லை. அடுத்த டி20 உலககோப்பை தொடர் 2020-ம் ஆண்டு நடைபெற உள்ளது.

Also watch

First published: September 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...